பொழுதுபோக்கு
ஷூ காலால் ஒரே மிதி… வி.ஜே.பார்வதியை தள்ளிவிட்ட சபரி; கேப்டன் டாஸ்கில் நடந்த மோதல்!
ஷூ காலால் ஒரே மிதி… வி.ஜே.பார்வதியை தள்ளிவிட்ட சபரி; கேப்டன் டாஸ்கில் நடந்த மோதல்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும நிலையில், பாட்டில் டாஸ்கில் வி.ஜே.பார்வதியை சபரி தள்ளிவிட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சபரிக்கு ரெட் கார்டு கொடுக்கும் நிலை வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கியது. தற்போது வரை 5 வாரங்கள் கடந்துள்ள நிலையில், மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போது 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். இதில் இந்த வாரம் துஷார் மற்றும் பிரவீன் ராஜ் என இரு போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். இதில் சாம்பியன் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட துஷார் வெளியேற்றப்பட்டது ஒரு பக்கம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்து. அதே சமயம், அரோரா, ரம்யா, கெமி போன்றவர்களை வெளியேற்றாமல் நன்றாக விளையாடும் பிரவீனை வெளியேற்றிருப்பது விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும பிக்பாஸ் வீட்டில் அடல்ட் கண்டெண்ட் பேசியது குறித்து சர்ச்சையில் சிக்கிய வி.ஜே.பார்வதி குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இன்று வெளியாகி இருக்கும் ப்ரமோவில், கேப்டனுக்கான டாஸ்கில் வி.ஜே.பார்வதியை சபரி கீழே தள்ளிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இறுதியாக இதில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கேப்டனுக்கான டாஸ்கில், ஒரு முக்கோணம் இருக்கிறது. இதில் மூன்று மூலைகளிலும் மூவர் நிற்க வேண்டும். வெளியில் இருக்கும் பாட்டிலை எடுத்து வந்து தங்கள் நிற்கும் மூலையில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவர் வைத்திருக்கும் பாட்டிலை மற்ற இருவரும் பிடுங்கலாம். இப்படி இருக்கும்போது சபரி 2 பாட்டில்கள் வைத்திருக்க அதில் ஒரு பாட்டிலை திவ்யா பிடுங்கி சென்றுவிடுகிறார். மீதமிருக்கும் இன்னொரு பாட்டிலை பிடுங்க வி.ஜே.பார்வதி போராடுகிறார். அவரை தடுக்க சபரியும் போராடுகிறார்.இதன் காரணமாக பார்வதிக்கும், சபரிக்கும் கடுமையான மோதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் சபரி தனது ஷூவால் பார்வதி காலை மிதித்துவிட, பார்வதி ஷூ வைத்து மிதிக்கிறியே என்று சொல்கிறார். தன்பிறகு, பார்வதி பாட்டிலை எடுக்க வர, அவரை சபரி கீழே தள்ளிவிடுகிறார். இதனால் பார்வதி விழுந்துவிட ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஷாக் ஆகியிருக்கின்றனர். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.
