வணிகம்
கனடா: சர்வதேச மாணவர்களுக்கான பணி நேரம் அதிகரிப்பு; இந்திய மாணவர்களுக்கு விதிகள் கடுமையாகுமா?
கனடா: சர்வதேச மாணவர்களுக்கான பணி நேரம் அதிகரிப்பு; இந்திய மாணவர்களுக்கு விதிகள் கடுமையாகுமா?
கனடாவில் படிக்கும் சர்வதேச மாணவர்கள் வாரத்திற்கு 24 மணிநேரம் வரை ‘ஆஃப்-கேம்பஸ்’ (Off-campus) வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதே சமயம், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வரும் மாணவர் விசா விண்ணப்பங்கள் மீதான விதிகளைக் கடுமையாக்கவும் கனடா அரசு திட்டமிட்டுள்ளது.படித்துக் கொண்டே வேலை செய்யும் சர்வதேச மாணவர்களுக்கு கனடா அரசு சலுகை அறிவித்துள்ளது. ‘ஆஃப்-கேம்பஸ் வேலை’ (off-campus work) செய்வதற்கான வரையறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சர்வதேச மாணவர்கள் வாரத்திற்கு 24 மணிநேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இது முந்தைய 20 மணி நேர வரம்பை விட அதிகமாகும்.’ஆஃப்-கேம்பஸ் வேலை’ என்பது, ‘ஸ்டடி பெர்மிட்’ (study permit) வைத்திருப்பவர், தான் பதிவுசெய்த கல்வி நிறுவனத்தின் வளாகத்திற்கு (campus) வெளியே மேற்கொள்ளும் வேலையைக் குறிக்கிறது. நவ.8, 2024 நிலவரப்படி, மாணவர்கள் ‘வொர்க் பெர்மிட்’ (work permit) தேவையின்றி வாரத்திற்கு 24 மணிநேரம் வரை ‘ஆஃப்-கேம்பஸ் வேலை’ செய்யலாம்.வெளிநாட்டு மாணவர்களுக்கான கனடாவின் வேலை விதிகளின்படி, சில மாணவர்கள் வழக்கமான கல்வி அமர்வுகளின் (academic sessions) போது வாரத்திற்கு 24 மணிநேரம் வரையிலும், கல்வி அமர்வுகளுக்கு இடையேயான திட்டமிடப்பட்ட விடுமுறை நாட்களில் முழுநேரமாகவும் (full-time) வொர்க் பெர்மிட் இல்லாமல் இந்த வகை வேலையைச் செய்யலாம்.’கேம்பஸுக்குள் வேலை’ (On-campus work) என்பது, ஒரு மாணவர் பதிவுசெய்துள்ள கல்வி நிறுவனத்தின் வளாகத்திற்குள் உள்ள வசதிகளில் மேற்கொள்ளப்படும் வேலையைக் குறிக்கிறது. மேல்நிலைக் கல்விக்குப் பிந்தைய (Post-secondary) ஸ்டடி பெர்மிட் வைத்திருப்பவர்கள், தாங்கள் முழுநேர மாணவர்களாக இருக்கும்பட்சத்தில், தங்கள் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியின் வளாகத்தில் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.’ஓபன் வொர்க் பெர்மிட்’ (Open work permit) வைத்திருப்பவரை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எந்தவொரு நிறுவனத்திலும் (employer) வேலை செய்ய அனுமதிக்கிறது, இருப்பினும் இது செய்யப்படும் வேலை (occupation) அல்லது இடத்தைப் (location) பொறுத்து கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும்.வேலை செய்வதற்கான கட்டுப்பாடுகள்பின்வரும் சந்தர்ப்பங்களில், வொர்க் பெர்மிட் இல்லாமல் கேம்பஸுக்கு வெளியே வேலை செய்ய முடியாது. உங்க ஸ்டடி பெர்மிட்டில் “படிக்கும் போது கேம்பஸுக்கு வெளியே வேலை செய்ய அங்கீகரிக்கப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தால். நீங்க ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியை 2-ம் மொழிப் பாடமாக (English or French as a second language program) மட்டும் படித்துக் கொண்டிருந்தால்.ஒரு வெளிநாட்டவர், அங்கீகரிக்கப்பட்ட கற்றல் நிறுவனத்தில் (designated learning institution) முழுநேர மாணவராக இருந்து, ஸ்டடி பெர்மிட் வைத்திருந்தால், அவர் படிக்கும் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியின் வளாகத்திற்குள் வொர்க் பெர்மிட் இல்லாமலேயே வேலை செய்யலாம். கல்வி அமர்வுகளுக்கு இடையேயான திட்டமிடப்பட்ட விடுமுறைகளின் போது அவர்கள் முழுநேர வேலையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டாலும், வழக்கமான கல்வி அமர்வுகளின் போது வாரத்திற்கு 24 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய அவர்களுக்கு அனுமதி இல்லை.இந்திய மாணவர்களுக்கு விதிகள் கடுமையாக்கம்?இந்திய மாணவர்களுக்கு, கனடா கடுமையான விதிமுறைகளைச் செயல்படுத்தப் பார்க்கிறது. சிபிசி நியூஸ் (CBC News) செய்தியின்படி, இந்தியாவிலிருந்து வரும் விசா விண்ணப்பங்களை நிராகரிக்க கனடா திட்டமிட்டுள்ளது. இந்தியா மற்றும் பங்களாதேஷில் இருந்து வரும் (விண்ணப்பங்களில்) மோசடி குறித்த கவலைகள் காரணமாக, குறிப்பிட்ட விசா விண்ணப்பங்களை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசு கோருகிறது.எதிர்காலத்தில், வெளிநாட்டு மாணவர் சேர்க்கையைக் குறைக்கவும் கனடா திட்டமிட்டுள்ளது. கனடாவின் 2026-2028 குடியேற்ற அளவுகள் திட்டம் (Immigration Levels Plan), 2026-2028-ம் ஆண்டுகளில் 155,000 புதிய மாணவர் வருகையை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டு இலக்கை விட 49% குறைவாகும்.
