Connect with us

இலங்கை

அரிசியின் விலையில் மாற்றம் – விற்பனையாளர்களுக்கு அறிவித்த ஜனாதிபதி!

Published

on

Loading

அரிசியின் விலையில் மாற்றம் – விற்பனையாளர்களுக்கு அறிவித்த ஜனாதிபதி!

ஒரு கிலோ நாடு அரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அடுத்த 10 நாட்களுக்குள் அவதானமாகச் செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
நெல் கொள்வனவிற்காக வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுவதாகவும் அதனால் மக்களின் அரிசியை நுகரும் உரிமையில் கைவைக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Advertisement

அதன்படி , நாடு அரிசி 1கிலோவின் மொத்த விலை 225 ரூபாவாகவும், சில்லறை விலை 230 ரூபாவாகவும், வெள்ளை அரிசியின் மொத்த விலை 215 ரூபாவாகவும், சில்லறை விலை 220 ரூபாவாகவும் இறக்குமதி செய்யப்படும்.

இதேவேளை, நாடு அரிசி 1 கிலோ 220 ரூபாவாகவும் சம்பாவின் மொத்த விலை 235 ரூபாவாகவும் சில்லறை விலை 240 ரூபாவாகவும் கீறி சம்பா அரிசியின் மொத்த விலை 255 ரூபாவாகவும் சில்லறை விலை 260 ரூபாவாகவும், அதேபோல் நாளாந்தம் அரிசி ஆலைகளிலிருந்து வெளிவரும் அரிசியின் அளவினைக் கணக்கிடுமாறும் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அரிசி தொடர்பான பிரச்சினைகளை அரசாங்கத்துடன் சுமூகமாக தீர்த்துக் கொள்ளுமாறும் அரிசி வர்த்தகர்களிடம் ஜனாதிபதி கோரியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.  (ப)
 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன