சினிமா
தமிழ்நாட்டில் மீண்டும் தலைகாட்டிய அஜித்.. உற்சாகத்தில் குவிந்த ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் மீண்டும் தலைகாட்டிய அஜித்.. உற்சாகத்தில் குவிந்த ரசிகர்கள்..!
விடாமுயற்சி, குட் பேட் அக்லீ என் பேக் டு பேக் இரண்டு படங்களில் நடித்து வரும் அஜித், அடுத்த ஆண்டு துபாயில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளில் நடிகர் அஜித்குமார் கலந்து கொள்கிறார். இந்த கார் பந்தயத்திற்கு ஆயத்தமாகி அதற்கான பயிற்சியை மேற்கொண்டார். அஜித் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ மற்றும் போட்டோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலானது உண்டு.
இந்த நிலையில், துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு திரும்பிய அஜித்குமாரை கண்டதும் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அவருடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். ரசிகர்களின் கூட்டத்தில் இருந்து விமான நிலைய அதிகாரிகள் பாதுகாப்புடன் அவரை அழைத்துச் சென்றனர்.
துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த நடிகர் அஜித்குமாரை பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்#AjithKumar #AK #News18TamilNadu #ChennaiAirport pic.twitter.com/jldikl6b4u
’விடா முயற்சி’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக சுரேஷ் சந்திரா புகைப்படம் ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் தலையை காட்டி அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார், அஜித்குமார்.