Connect with us

சினிமா

தனது முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராய் குறித்து முதன் முறையாக பேசிய பிரபல நடிகர்..!

Published

on

தனது முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராய் குறித்து முதன் முறையாக பேசிய பிரபல நடிகர்..!

Loading

தனது முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராய் குறித்து முதன் முறையாக பேசிய பிரபல நடிகர்..!

1973இல் கர்நாடகாவில் பிறந்த ஐஸ்வர்யா ராய் 1994 இல் உலக அழகி போட்டியில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து “இருவர்” படத்தின் மூலமாக ஐஸ்வர்யா ராயை மணிரத்னம் சினிமாவில் அறிமுகம் செய்தார். “இருவர்” படத்திற்கு பின்னர் ஐஸ்வர்யா ராய்க்கு பட வாய்ப்புகள் இந்தி திரையுலகிலும் குவிந்தன. பேரழகிற்கு பெயர் போன நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு பட வாய்ப்புகள் குவிந்து புகழின் உச்சத்தில் இருந்தார். குறிப்பிட்ட சமயம் இவர் பல நடிகர்களுடனும் கிசுகிசுக்கப்பட்டார்.

Advertisement

பாலிவுட்டில் நடிகர் நடிகைகள் காதலில் விழுவதும் பின்னர் காதல் கசந்து பிரிவதும் மிகவும் சாதாரண விஷயமாகிவிட்டது. நமக்கு தெரிந்து நமக்கு பிடித்த பல நடிகர் நடிகைகள் உள்ளனர். அப்படி ஐஸ்வர்யா ராய் சினிமாவுக்குள் நுழைந்து முதன் முதலில் பிரபல நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டார். ஜோடிப்பொருத்தம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக இந்த ஜோடி நிச்சயம் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டனர். அந்த பிரபல நடிகர் வேறு யாரும் இல்லை, பாலிவுட்டில் அப்போது மிகவும் பிரபலமாக இருந்த விவேக் ஓபராய் தான்.

விவேக் ஓபராய் ஐஸ்வர்யா ராயின் காதல் அப்போது மிகவும் பேசப்பட்ட ஒன்று, இவர்களின் காதல் கதை பாலிவுட்டில் பலரும் அறிந்த விஷயம். ஒன்றாக விழாக்களுக்கு போவது, ஊர்சுற்றுவது என காதல் பொங்க உலா வந்த இந்த காதல் ஜோடி பின்னர் பிரேக் அப் செய்து பிரிந்தனர். அதன் பின்னர் தான் ஐஸ்வர்யா ராய் சல்மான்கானுடன் காதல் வயப்பட்டார். பல ஆண்டுகள் கடந்துவிட்டது, தற்போது முதன் முறையாக நடிகர் விவேக் ஓபராய் தனது முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “பிரபலமாக இருப்பதன் கொடுமை என்னவென்றால் உங்கள் பிரேக்கப் செய்தி எல்லா இடத்திலும் பரவிவிடும். அந்த உறவில் இருந்து வெகுதூரமா வந்துவிட்டேன்.

News18

காதல் தோல்வியுற்ற சமயத்தில் எனது பிரார்த்தனைகளை கடவுள் கேட்க மறுத்துவிட்டார், அதனால் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஐஸ்வர்யா ராயும் நல்ல வாழ்க்கையை துணையை தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியாக உள்ளார். யாரவது உங்கள் வாழ்க்கையில் இருந்து வெளியேறினால் அதனை மாற்றி யோசியுங்கள், நிச்சயம் உங்களுக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும்” என்று பேசினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன