உலகம்
புர்கினோ ஃபசோவின் புதிய பிரதமர் நியமனம்!1

புர்கினோ ஃபசோவின் புதிய பிரதமர் நியமனம்!1
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ ஃபசோவின் இராணுவ அரசாங்கம் அந்நாட்டின் புதிய பிரதமராக ரிம்டல்பா ஜீன் இம்மானுவேல் அவ்டிராகோவை நியமித்துள்ளது.
புர்கினோ ஃபசோ ஜனாதிபதி இப்ராஹிம் தரோரின் இராணுவ அரசினால் முன்னாள் பிரதமர் டம்பேலா தலைமையிலான அரசாங்கம் கலைக்கபட்டதைத் தொடர்ந்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலைக்கப்பட்ட டம்பேலா தலைமையிலான அரசின் தகவல் தொடர்பு அமைச்சராகவும், அரசு செய்தி தொடர்பாளராகவும் அவ்டிராகோ பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டம்பேலா அரசு கலைக்கப்பட்டதிற்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.