சினிமா
நயனுக்கு போட்டியாக புது பிசினஸ் தொடங்கிய விக்னேஷ் சிவன்.. டைரக்ஷன் வேலையை தவிர எல்லாம் பார்க்கிறாரே

நயனுக்கு போட்டியாக புது பிசினஸ் தொடங்கிய விக்னேஷ் சிவன்.. டைரக்ஷன் வேலையை தவிர எல்லாம் பார்க்கிறாரே
கடந்த மாதம் நயன் தான் சோசியல் மீடியாவின் பரபரப்பு செய்தியாக இருந்தனர். அது தற்போது ஓய்ந்து போன நிலையில் மற்றொரு தகவல் கசிந்துள்ளது.
அதாவது நயன் நடிப்பு மட்டுமல்லாமல் பல பிசினஸ் செய்து லாபம் பார்த்து வருகிறார். அவருக்கு துணையாக விக்னேஷ் சிவன் சப்போர்ட் செய்து வருகிறார்.
அதே சமயம் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். ஆனால் அந்த படம் எப்போது முடிந்து வெளியாகும் என்பதுதான் கேள்விக்குறி.
இது ஒரு பக்கம் இருக்க தற்போது மனைவிக்கு போட்டியாக அவர் புது பிசினஸ் ஒன்றை தொடங்கியிருக்கிறாராம்.. டார்க் டேலன்ட்ஸ் என்ற கம்பெனியை இவர் ஆரம்பித்துள்ளார்.
இந்த நிறுவனம் சினிமா பிரபலங்களின் கால்ஷீட் வேலைகளை கவனித்து வருகிறது. முன்பெல்லாம் நடிகர் களின் தேதிகளை கவனிப்பதற்கு மேனேஜர் என தனிதனி நபர்கள் இருப்பார்கள்.
ஆனால் இப்போது ஒரு நிறுவனமே பல பிரபலங்களின் தேதிகளை கவனித்துக் கொள்ளும். ஆந்திராவில் கூட நடிகர் ராணா இதை ஒரு பிசினஸ் ஆக செய்து வருகிறார்.
பாலிவுடிலும் இது பிரபலம் தான். அதைத்தான் தற்போது விக்னேஷ் சிவன் கையில் எடுத்துள்ளார். ஆக மொத்தம் டைரக்ஷன் வேலையை தவிர மத்த எல்லா எல்லா வேலையும் பார்க்கிறார்.