சினிமா
லெஜெண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படம்.. ஹீரோயின் யாருன்னு தெரியுமா..? வெளியான வீடியோ அப்டேட்!

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படம்.. ஹீரோயின் யாருன்னு தெரியுமா..? வெளியான வீடியோ அப்டேட்!
பிரபல ஜவுளி மற்றும் ஷாப்பிங் கடையின் உரிமையாளராக இருப்பவர் லெஜெண்ட் சரவணன். சினிமா மீது ஆர்வம் கொண்ட இவர் ‘தி லெஜெண்ட்’ என்ற படத்தில் நடித்திருந்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை பிரபல விளம்பரப் பட இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இயக்கியிருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஊர்வசி ரவுத்தேலா, விவேக் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். தான் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்று லெஜெண்ட் சரவணன் கூறியிருந்தார். இதற்காக அவர் தயாராகி வந்த நிலையில், தற்போது அவரது அடுத்த படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
தனது அடுத்த படத்திற்காக ஜார்ஜியாவில் நடந்து வரும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது X தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் லெஜெண்ட் சரவணா. கொடி, பட்டாசு, கருடன் படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் தான் இந்த படத்தை இயக்குகிறார். மேலும் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். பகிரப்பட்டுள்ள போட்டோவை பார்க்கும் போது ஆக்சன் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு போல் உள்ளது. மேலும், படத்தின் பெயர் எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை, “லெஜெண்ட் சரவணாவின் ப்ரொடக்ஷன் நம்பர் 2” என்ற ஹேஷ்டேகுடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
லெஜெண்ட் சரவணா அருகில் நடிகை பாயல் ராஜ்புத் கை குலுக்கி நிற்கும் புகைப்படமும் அதில் உள்ளது, இதை வைத்து படத்தின் நடிகை அவர்தான் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் படப்பிடிப்பு தளத்தில் நடிகை பாயல் ராஜ்புத்தின் பிறந்தநாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். லெஜெண்ட் சரவணா நடிக்கும் இந்தப் படம் குறித்த மேலும் தகவலுக்கு நாம் காத்திருக்க வேண்டும்.