இந்தியா
அடுக்கடுக்கான கேள்விகள்… அடுத்தடுத்து பறந்த பதில்கள்… ஸ்டலின், ஈபிஎஸ் காரசார விவாதம்

அடுக்கடுக்கான கேள்விகள்… அடுத்தடுத்து பறந்த பதில்கள்… ஸ்டலின், ஈபிஎஸ் காரசார விவாதம்
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறித்து முறையாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, படிப்படியாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தான் உயிரிழப்புகள் குறைந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
சாத்தனூர் அணையை முறையான அறிவிப்பின்றி திறக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டபேரவையில் கேள்வியெழுப்பினார். சாத்தனூர் அணை திறப்பதாக அறிவிப்பு கொடுத்த 15 நிமிடங்களில் அணையை திறந்து விட்டதால் தான் பாதிப்பு ஏற்பட்டதாகவும் குறைகூறினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டதாக இந்திய கணக்காயர் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
ஆனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு கீழ் நூறு ஏரிகள் உள்ளதாகவும், அந்த ஏரிகளில் மழைநீரும் பெருமளவு கலந்ததே சென்னை மாநகரத்தில் பாதிப்பு ஏற்பட்டதற்கு காரணம் என்றும் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டதாலேயே 250 க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அமைச்சர் சேகர் பாபு குற்றஞ்சாட்டினார்.
Also Read :
வன்னியர் உள் இட ஒதுக்கீடு; முதல்வர் சொன்ன காரணம்.. சட்டமன்றத்தில் பாமக அமளி
இதனால், கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, 250 பேர் உயிரிழந்திருப்பதாக எந்த அடிப்படையில் அமைச்சர் கூறுகிறார் என்று வினவினார். ஒரு பொய்யை திருப்பி திருப்பி பேசி மெய் என நிரூபிக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர், சாத்தனூர் அணையில் இருந்து படிப்படியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் தான் உயிரிழப்புகள் குறைந்ததாக விளக்கமளித்தார்.