Connect with us

சினிமா

Combination-னே வித்தியாசமா இருக்கே.. தரமான படத்தை கொடுக்க போகும் சிம்பு

Published

on

Loading

Combination-னே வித்தியாசமா இருக்கே.. தரமான படத்தை கொடுக்க போகும் சிம்பு

நடிகர் சிம்பு தற்போது Thug Life படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் STR கமலஹாசனின் மகனாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. பத்து தல படத்துக்கு பிறகு STR ஹீரோவாக நடித்த எந்த படமும் இதுவரை வெளியாகவில்லை. இவர் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அப்டேட்-கள் மட்டும் வந்துகொண்டு இருக்கிறது.

இப்படி இருக்க, இவர் ஒரு வரலாற்று படத்தில் அடுத்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான வேலைப்பாடுகள் எதுவும் இதுவரை துவங்கவில்லை. Thug Life படத்தை தொடர்ந்து, இவர் அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

Advertisement

அதுமட்டுமின்றி, அவரது 50-ஆவது படத்தை தானே இயக்கியும் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது அதில் ஒரு சின்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இப்படி இருக்க சிம்புவின் அடுத்த ஒரு முக்கியமான படத்தை பற்றிய அப்டேட் வந்துள்ளது. சிம்புவின் 50-ஆவது படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் தான் இயக்கப்போகிறார். உடனே இது விண்ணைத்தாண்டி வருவாயா 2 படமா இருக்குமோ என்ற எண்ணம் எல்லோருக்கும் வரும். ஆனால் அது தான் இல்லை.

இந்த படம் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையாக இருக்கும். இந்த படத்தை இயக்குவது மட்டும் தான் கெளதம் வாசுதேவ் மேனனாக இருக்குமே தவிர, கதை அவருடையது இல்லை. கதை வெற்றிமாறனுடையது. என்னடா இது காம்பினேஷனே வித்தியாசமா இருக்கு என்று ரசிகர்கள் தற்போது கூறி வருகின்றனர்.

Advertisement

வெற்றிமாறன் கதையில் வன்முறை இல்லாமல் இருக்காது.. காதலும் வேறு மாதிரி இருக்கும். ஆனால் கெளதம் வாசுதேவ் மேனன், மென்மையான காதலை எடுக்க கூடியவர்.

இரண்டு பேருடைய காம்பினேஷன் கலந்த படம் எப்படி இருக்கும் என்று இப்போதே எதிர்பார்ப்பு வந்துவிட்டது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன