வணிகம்
இனி PF பணத்தை எடுக்க எங்கும் அலைய வேண்டாம்… ATM-க்கு போனாலே போதும்!!!

இனி PF பணத்தை எடுக்க எங்கும் அலைய வேண்டாம்… ATM-க்கு போனாலே போதும்!!!
தற்போது EPF அக்கவுண்டில் உள்ள PF தொகையை வித்ட்ரா செய்து, அதனை வங்கி கணக்கில் பெறுவதற்கு 7 முதல் 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். அவசர அவசரமாக பணத்தை வித்டிரா செய்ய நினைப்பது இந்த விஷயத்தில் சாத்தியம் ஆகாது.
ஆனால் தற்போது எம்பிளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனம், அதன் மெம்பர்களுக்கு வித்டிராயல் செயல்முறையை எளிமைப்படுத்த PF அக்கவுண்டில் உள்ள பணத்தை ATM மூலமாக வித்ட்ரா செய்வதற்கான அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்த விளக்கமான தகவல்களை இந்த பதிவின் மூலம் இங்கே பார்க்கலாம்.
EPFO மெம்பர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதன் பொருட்டு எம்பிளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனம் (Employees Provident Fund Organization) EPFO 3.0 என்ற புதிய பதிப்பை அப்டேட் செய்கிறது. EPFO 3.0 பயன்படுத்துவதன் முக்கியமான நன்மைகளில் ஒன்றாக சப்ஸ்கிரைபர்கள், பிராவிடண்ட் ஃபண்ட் தொகையை ATM-களில் இருந்து வித்ட்ரா செய்வதற்கான ஆப்ஷனை பெறுகிறார்கள்.
PF வித்டிராயல்களை எளிமைப்படுத்துவதற்காக EPFO ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. அதன் மூலமாக இனி சப்ஸ்கிரைபர்கள் தங்களுடைய PF பணத்தை நேரடியாக ATM-களுக்கு சென்று வித்டிரா செய்து கொள்ளலாம். டெபிட் கார்டை போல காட்சி அளிக்கும் ஒரு ATM கார்டு இதற்காகவே சப்ஸ்கிரைபர்களுக்கு வழங்கப்படும். அதனை பயன்படுத்தி ATM-களிலிருந்து PF பணத்தை மெம்பர்கள் எடுத்து கொள்ளலாம்.
அதே நேரத்தில் மொத்த டெபாசிட்டில் 50 சதவீத பணத்தை மட்டுமே அதிகபட்சமாக எடுக்கலாம் என்று சொல்லப்பட்டு உள்ளது. இந்த அம்சம் வருகிற மே மற்றும் ஜூன் 2025-க்குள் அமல்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி, EPF அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டிற்கு வித்டிரா செய்யப்பட்ட PF தொகை கிரெடிட் ஆவதற்கு 7 முதல் 10 நாட்கள் ஆகிறது.
ஆனால் இந்த அப்டேட் செய்யப்பட்ட அம்சம் மூலமாக மெம்பர்கள் தங்களுடைய PF தொகைகளை நேரடியாக ATM-களில் இருந்து எடுப்பதன் மூலமாக வித்டிராயல் செயல்முறை எளிமைப்படுத்தப்படுகிறது. பங்களிப்புகளில் நிலவிவரும் 12 சதவீத வரம்பை அரசு நீக்கி உள்ளது. இதன் மூலமாக பணியாளர்கள் தங்களால் இயன்ற தொகையை EPF அக்கவுண்டில் பங்களிக்கலாம். மறுபுறம் நிறுவனத்தின் பங்களிப்பு என்பது நிலையானதாக இருக்கும். இது பணியாளரின் சம்பளத்தை பொறுத்து நிர்ணயிக்கப்படும். எனவே இதனால் நிறுவனத்திற்கு அதிக சுமை ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.