இந்தியா
சட்டமன்றத்திற்கு வந்த ஓ. பன்னீர்செல்வம்.. அவைக்குள் வராததற்கு காரணம் என்ன?

சட்டமன்றத்திற்கு வந்த ஓ. பன்னீர்செல்வம்.. அவைக்குள் வராததற்கு காரணம் என்ன?
தலைமைச் செயலகம் வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டுவிட்டு அவை நிகழ்வுகளில் பங்கேற்காமல் புறப்பட்டுச் சென்றார்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செயல்பட்டு வந்த நிலையில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராகத் தேர்வு செய்தனர். இதையடுத்து ஓ. பன்னீர்செல்வத்துக்கு வேறு இருக்கை ஒதுக்கப்பட்டது.
பொதுவாக சட்டப்பேரவை நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்கும் ஓ. பன்னீர்செல்வம், இருக்கை மாற்றத்துக்குப் பின்னர் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்பதைக் குறைத்துக் கொண்டார்.
நேற்று சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்காத ஓ. பன்னீர்செல்வம், இன்று தலைமைச் செயலகம் வந்தார். இன்று அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவைக்கு உள்ளே வராமல் வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.