Connect with us

இந்தியா

டாப் 10 நியூஸ்: ஸ்டாலின் கேரளா பயணம் முதல் 6 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் வரை!

Published

on

Loading

டாப் 10 நியூஸ்: ஸ்டாலின் கேரளா பயணம் முதல் 6 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் வரை!

மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது முழுமையானப் படைப்பு நூல்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) வெளியிடுகிறார்.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் பெரியார் நினைவகம் மற்றும் நூலக திறப்பு விழா நாளை (டிசம்பர் 12) நடைபெறகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கொச்சி செல்கிறார்.

Advertisement

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா இன்று பதவியேற்கிறார்.

மறைந்த கர்நாடகா முன்னாள் முதல்வர் எம்.எஸ்.கிருஷ்ணாவின் உடல் அரசு மரியாதையுடன் மாண்டியா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.

கலைஞர் கைவினை திட்டத்தில் ரூ.3 லட்சம் வரை பிணையில்லா கடனுதவி பெறுவதற்காக இன்று முதல் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயில் ஹராரே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடை வாடகை மீதான 18 சதவித ஜி.எஸ்.டி-யை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் போட்டியில், சென்னையின் எஃப்சி – ஹைதராபாத் எப்ஃசி அணிகள் மோதுகின்றன.

கிச்சன் கீர்த்தனா: ஹெர்பல் பாஸ்தா

Advertisement

ஆளுநர் -அண்ணாமலை-நேருக்கு நேர் அரைமணி நேரம்!

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன