Connect with us

உலகம்

முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ள ஒரே நாடு… என்ன காரணம் தெரியுமா?

Published

on

முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ள ஒரே நாடு… என்ன காரணம் தெரியுமா?

Loading

முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ள ஒரே நாடு… என்ன காரணம் தெரியுமா?

உலகில் ஒரே ஒரு நாட்டில் மட்டும்தான் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் இஸ்லாம் பற்றி பரப்புரை மேற்கொண்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அது எந்த நாடு என்பது பற்றி பார்க்கலாம்.

Advertisement

இன்றைக்கு உலகில் அதிகம் பேர் பின்பற்றும் மதமாக கிறிஸ்தவம் இருந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் உள்ளது. சுமார் 200 கோடிக்கும் அதிகமானோர் இந்த மதத்தை பின்பற்றுகிறார்கள்.

மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, தெற்காசியாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். கம்யூனிசம் பேசக்கூடிய சீனாவிலும் முஸ்லிம்கள் மதச் சடங்குகளை பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள்.

இதே போன்று ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் இஸ்லாம் பரவியுள்ளது. இருப்பினும் உலகில் சில நாடுகளில் முஸ்லிம்கள் ஒருவர் கூட இல்லாத நிலையும் காணப்படுகிறது. உலகில் உட கொரியா நாடு தான் முஸ்லிம்கள் உள்ளே நுழைவதற்கு தடை விதித்துள்ளது. இங்கு இஸ்லாம் பற்றி பரப்பரை செய்தால் மரண தண்டனை கூட விதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

வடகொரியாவில் 2 கோடியே 60 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வடகொரியா அபாயகரமான நாடாகவும் பார்க்கப்படுகிறது. பல்வேறு மர்மங்கள் இந்த நாட்டில் காணப்படுகின்றன. கடவுள் நம்பிக்கை இல்லாத அரசாக வடகொரியா அரசு இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்கிற சுதந்திரத்தையும் குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு வழங்கி உள்ளது. அதேநேரம், ஒற்றுமை சீர்குலைய கூடாது என்ற நிபந்தனையும் அரசு விதிக்கிறது. வடகொரியாவில் புத்தமதம், கிறிஸ்தவ மதத்தை பின்பற்றவர்கள் உள்ளனர்.

இருப்பினும் முஸ்லிம்களுக்கு வடகொரியா தடை விதித்து இருக்கிறது. அங்கு சுமார் 3000 முஸ்லிம்கள் மட்டுமே இருந்தாலும் அவர்களுக்காக வழிபாடு நடத்த மசூதிகள் கிடையாது. தலைநகர் பியோங்யாங்கில் உள்ள ஈரானிய தூதராக வளாகத்திற்குள் ஒரே ஒரு மசூதி மட்டுமே அமைந்துள்ளது. இதனையும் அங்கு வளாகத்திற்குள் வசிக்கும் ஈரானியர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன