Connect with us

இந்தியா

உடைகிறதா இந்தியா கூட்டணி? எங்கே துவங்கியது சலசலப்பு 

Published

on

உடைகிறதா இந்தியா கூட்டணி? எங்கே துவங்கியது சலசலப்பு 

Loading

உடைகிறதா இந்தியா கூட்டணி? எங்கே துவங்கியது சலசலப்பு 

Advertisement

பாஜக கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அதன்பிறகு நடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்த இரு தேர்தல்களிலும் காங்கிரஸ் படு தோல்வியைச் சந்தித்தது.

தோல்வியில் இருந்து மீள்வதற்கும், பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமரவிடக் கூடாது எனும் நோக்கத்துடனும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்தியாவின் பல்வேறு மாநிலக் கட்சிகளும், காங்கிரஸும் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்தன.

இந்தக் கூட்டணி உருவாக்கத்தில் முதலில் பெரும் பங்கு வகித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கூட்டணியில் இருந்து திடீரென விலகி பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். இருந்தாலும் தொடர்ந்து இந்தியா கூட்டணி தனது பயணத்தைத் தொடர்ந்தது. கூட்டணிக்கு தலைவர் இல்லை என்றாலும், கூட்டணியில் இருக்கும் பெரும் மற்றும் மூத்த கட்சியான காங்கிரஸ் அந்தக் கூட்டணியை வழிநடத்திவருகிறது.

Advertisement

பின் நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்து ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேசிய அளவில் இந்தியா கூட்டணி இருந்தாலும், மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்தியா கூட்டணி அமையாமல், மாநிலக் கட்சிகள் தனிச்சையாகவும் தேசியக் கட்சிகளான காங்கிரஸும், கம்யூனிஸ்டும் எதிர் எதிரே களத்தில் நின்று தேர்தலைச் சந்தித்தன.

2024-ம் ஆண்டு மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி ஆட்சியை அமைத்து பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தலைமையில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது.

Advertisement

ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தற்போது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரான மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்றுவருகிறது. கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி துவங்கிய இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து, அதானி விவகாரம், மணிப்பூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கூட்டத் தொடர் துவங்கிய நாள் முதல் இன்று (9-ம் தேதி) வரை ஒரு நாளும் கூட்டத் தொடர் முழுமையாக நடைபெறாமல் தினமும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் முன்வைக்க வேண்டிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கும் கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய இரு கட்சிகளும் புறக்கணித்ததாக ஒரு தகவல் இருக்கிறது. அதேசமயம், டிசம்பர் 3-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த எதிர்க்கட்சிகள் போராட்டத்தையும் இரு கட்சிகளும் புறக்கணித்தன. இதிலே இந்தியா கூட்டணி உடைகிறதா எனும் பேச்சுகள் எழுந்தன.

Advertisement

நாடாளுமன்றம் தினமும் முடங்குவது குறித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சமிக் பட்டாச்சார்யா, “கூட்டணியின் நிலையை பார்த்தீர்களா, சில சமயங்களில் திரிணாமூல் காங்கிரஸ், சில சமயங்களில் ஆம் ஆத்மி உள்ளிட்டவை இடம் பெறாமலே இருக்கின்றன. காங்கிரஸ் மக்களிடம் செல்லுமிடங்களில் எல்லாம் அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள். காங்கிரஸுக்கு தற்போது வெறும் நாடாளுமன்ற நுழைவு வாயல் மட்டுமே உள்ளது. அல்லது அவையை நடக்கவிடாமல் முடக்குவது” என பேசி கூட்டணிக்கு இருந்த புகைச்சலை அதிகப்படுத்தினார்.

திரிணாமுல் காங்கிரஸின் மற்றொரு எம்.பி. கீர்த்தி ஆசாத், “இந்தியா கூட்டணியை மம்தா வழிநடத்த வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர், “இது நல்ல நகைச்சுவை” என்று தெரிவித்தார்.

Advertisement

தேசிய அளவில் இந்தியா கூட்டணி என்று இருந்தாலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் மகா விகாஸ் எனும் கூட்டணியில் இந்தக் கூட்டணி இயங்கிவருகிறது. இதில், உத்தவ் சிவசேனா, சரத்பவார் அணி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது. அன்றை தினம், உத்தவ் சிவசேனா வெளியிட்ட விளம்பரத்தில், பாபர் மசூதி இடிப்பு படமும் அதில் உத்தவ் தாக்கரே படமும் இடம் பெறச் செய்து பெருமை கொள்கிறோம் என விளம்பரப்படுத்தினர்.

Advertisement

இதற்கு கண்டனம் தெரிவித்து சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்டிரா மாநிலத் தலைவர் அபு அஸ்மி, “உத்தவ் தாக்கரே உதவியாளர் தனது எக்ஸ் பக்கத்தில், மசூதியை இடித்தவர்களைப் பாராட்டி பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். நாங்கள் மகா விகாஸ் அகாடியில் இருந்து வெளியேறுகிறோம். மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள ஒருவர் எப்படி அவ்வாறு பேச முடியும்? பின்னர் பாஜகவுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? நாங்கள் ஏன் கூட்டணியில் நீடிக்க வேண்டும்?” என்று தெரிவித்து கூட்டணியில் இருந்து அந்தக் கட்சி விலகியது.

இந்தியா கூட்டணியில் இருப்பது குறித்து எம்.பிக்கள் மட்டுமே தங்களின் அதிருப்திகளை தெரிவித்துவந்தநிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரே தற்போது தனது அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளார். சமீபத்தில் ஒரு தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர், “இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் பெரும் பங்கு எனக்கு இருக்கிறது. ஆனால், தற்போது அதனை முன்னின்று நடத்துபவர்களால் அதனை நடத்த முடியாவிட்டால் நான் என்ன செய்வது. அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.

Advertisement

நான் மேற்குவங்கத்தைவிட்டு வெளியேற மாட்டேன். ஆனால், இந்தியா கூட்டணியை தலைமை ஏற்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதனை ஏற்று, இங்கிருந்தே இந்தியா கூட்டணியை வழி நடத்துவேன்” என்று தெரிவித்தார்.

இவரின் கருத்து தற்போது தேசிய அரசியலில் இந்தியா கூட்டணி உடைகிறதா எனும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் தங்களின் ஆதரவையும் எதிர்ப்பையும் வெளிபடுத்திவருகின்றனர்.

Advertisement

காங்கிரஸ் எம்.பி. தனுஜ் புனியா இது குறித்து பேசும்போது, “இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கட்சியின் தேசியத் தலைவருடன் விவாதிக்க வேண்டும். இது ஊடகங்களில் விவாதிக்க வேண்டிய விஷயம் அல்ல. மம்தா பானர்ஜிக்கு பரிந்துரைகள் இருந்தால், அவை அனைத்து கூட்டணி கட்சிகளின் விவாதத்திற்கு முன்வைக்கப்பட வேண்டும். அதன்படி முடிவுகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸின் சரத்சந்திர பவார் பிரிவின் தலைவர் சரத்பவார், “மம்தா பானர்ஜி திறமையான தலைவர். இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க தயார் என்று கூற அவருக்கு முழு உரிமையும் உண்டு” என்றார்.

ஆர்.ஜெ.டி. தலைவரான தேஜஸ்வி யாதவ், “மம்தா பானர்ஜி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குவது எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், தலைவரை ஒருமித்த கருத்தோடு தேர்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான டி.ராஜா, “மம்தா பானர்ஜி எந்த அர்த்தத்தில் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. இந்தியா கூட்டணியின் நோக்கத்தை ஒருவர் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன