Connect with us

வணிகம்

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டுமா… வாங்க எப்படினு தெரிஞ்சுக்கலாம்!

Published

on

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டுமா... வாங்க எப்படினு தெரிஞ்சுக்கலாம்!

Loading

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டுமா… வாங்க எப்படினு தெரிஞ்சுக்கலாம்!

Advertisement

ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளில் 98.08 சதவீதம் வங்கி முறைக்குத் திரும்பிவிட்டதாகவும், இன்னும் ரூ.6,839 கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே பொதுமக்களிடம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மே 19 இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரூ.2,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மே 19, 2023 நாளின் முடிவில்  ரூ.3.56 லட்சம் கோடியாக புழக்கத்தில் இருந்த ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, நவம்பர் 29, 2024 அன்றைய நாள் முடிவடையும் போது ரூ.6,839 கோடியாகக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்றுவதற்கான வசதி அக்டோபர் 7, 2023 வரை அனைத்து வங்கிக் கிளைகளிலும் இருந்தது. தற்போது, ரிசர்வ் வங்கியின் 19 வெளியீட்டு அலுவலகங்களில் இந்த வசதி இன்னுமும் நடைமுறையில் உள்ளது.

Advertisement

அக்டோபர் 9, 2023 முதல், ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்களில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை அவர்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தியது. மேலும், பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்க ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை இந்திய தபால் வசதி மூலம் நாட்டிலுள்ள எந்த ஒரு தபால் நிலையத்திலிருந்தும் ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பலாம். எனினும், இந்த 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையே.

அகமதாபாத், பெங்களூரு, பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, கவுஹாத்தி, ஐதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் இந்த 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் அல்லது மாற்றம் செய்கின்றன.

Advertisement

ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்களில் மட்டும்.

ரிசர்வ் வங்கி அலுவலகத்தை நேரில் பார்வையிடலாம் அல்லது தபால் மூலம் தேவையான குறிப்புகளை அனுப்பலாம்.

ஆதார் அட்டை, பான் கார்டு போன்ற செல்லுபடியாகும் அடையாளச் சான்றுகள்.

Advertisement

2,000 ரூபாய் நோட்டு பெறப்பட்ட பிறகு பரிமாற்றப்பட்ட தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

2016 நவம்பரில், அப்போது நடைமுறையில் இருந்த ரூ.1,000 மற்றும் ரூ.500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரூ.2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன