Connect with us

தொழில்நுட்பம்

ரெட் மேஜிக் 10 ப்ரோ+, ரெட் மேஜிக் 10 ப்ரோ உடன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ‘எக்ஸ்ட்ரீம் எடிஷன்’ சிப் அறிமுகம்

Published

on

Loading

ரெட் மேஜிக் 10 ப்ரோ+, ரெட் மேஜிக் 10 ப்ரோ உடன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ‘எக்ஸ்ட்ரீம் எடிஷன்’ சிப் அறிமுகம்

ZTE இன் துணை பிராண்டான நுபியாவின் சமீபத்திய கேமிங்-ஃபோகஸ்டு ஸ்மார்ட்போன்களான ரெட் மேஜிக் 10 ப்ரோ+ மற்றும் ரெட் மேஜிக் 10 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. பேட்டரி மற்றும் சார்ஜிங் ஸ்பீட்களை தவிர, இரண்டு மாடல்களும் ஒரே மாதிரியான இன்டெர்னல்களை கொண்டுள்ளன. 24ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் “எக்ஸ்ட்ரீம் எடிஷன்” வேர்ஷன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 1.5K ரெசலூஷன் டிஸ்ப்ளே மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ரெட் மேஜிக் 10 ப்ரோ+ ஆனது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7,050mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, அதே சமயம் ரெட் மேஜிக் 10 ப்ரோ ஆனது 80W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள்:

Advertisement

ரெட் மேஜிக் 10 ப்ரோ+ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை CNY 5,999 (தோராயமாக ரூ. 72,000). இந்த விலையில் 16GB + 512GB மாடல் கிடைக்கிறது. மேலும் இது டார்க் நைட் வண்ணத்தில் வருகிறது. அதேசமயம் டியூட்டிரியம் ஃப்ரண்ட் டிரான்ஸ்பரன்ட் டார்க் நைட் மற்றும் சில்வர் விங் ஆகிய வண்ண வகைகளில் விலை CNY 6,299 (தோராயமாக ரூ. 74,000) ஆகும். அதேசமயம் 24GB + 1TB வேரியண்ட்டின் விலை CNY 7,499 (தோராயமாக ரூ. 88,000) ஆகும்.

அதேசமயம் ரெட் மேஜிக் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12GB + 256GB மாடலின் விலை CNY 4,999 (தோராயமாக ரூ. 58,000) ஆகும். இதன் 12GB + 512GB வேரியண்ட்டின் விலை CNY 5,499 (தோராயமாக ரூ. 64,000) ஆகும். இது டார்க் நைட், டியூட்டிரியம் ஃப்ரன்ட் டிரான்ஸ்பரன்ட் டார்க் நைட் மற்றும் டிரான்ஸ்பரன்ட் சில்வர் விங் ஆகிய வண்ண வகைகளில் வருகிறது. இந்த இரண்டு மாடல்களும் தற்போது சீனாவில் ப்ரீ ஆர்டர்களுக்கு தயாராக உள்ளன மற்றும் டெலிவரி ஆனது நவம்பர் 18 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

விவரக்குறிப்புகள்:

Advertisement

இரட்டை சிம் (நானோ) கொண்ட ரெட் மேஜிக் 10 ப்ரோ+ மற்றும் ரெட் மேஜிக் 10 ப்ரோ ஆனது ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ரெட் மேஜிக் AI OS 10.0 மூலம் இயங்குகிறது. 144Hz ரெஃபிரஷ் ரேட், 960Hz டச் சம்ப்ளிங் ரேட், 2,000nits பீக் பிரைட்னஸ் மற்றும் 2,592Hz PWM டிம்மிங் உடன் 6.8-இன்ச் 1.5K (1,216×2,688 பிக்சல்கள்) BOE Q9+ AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது 24ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் “எக்ஸ்ட்ரீம் எடிஷன்” சிப் மூலம் இயக்கப்படுகிறது.

ரெட் மேஜிக் 10 ப்ரோ+ மற்றும் ரெட் மேஜிக் 10 ப்ரோ ஆனது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதாவது 50 மெகாபிக்சல் OmniVision OV50E40 சென்சார், 50 மெகாபிக்சல் அல்ட்ராவைட் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் அண்டர் டிஸ்ப்ளே ஃப்ரன்ட் கேமராவை கொண்டுள்ளது.

இதையும் படிங்க: 
Snapdragon 8 Elite ப்ராசஸருடன் அறிமுகமாகியுள்ள OnePlus 13 மொபைல்.. இவ்வளவு அம்சங்களா? முழு விவரம் இதோ!

Advertisement

ஸ்மார்ட்போன்களின் இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi, ப்ளூடூத், NFC, USB டைப்-C போர்ட் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும். மேலும், 520Hz கேமிங் ஷோல்டர் கீஸ், மூன்று மைக்ரோஃபோன்கள் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகியவற்றுடன் வருகிறது. ரெட் மேஜிக் 10 ப்ரோ+ ஆனது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7,050mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, அதே சமயம் ரெட் மேஜிக் 10 ப்ரோ ஆனது 80W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன