Connect with us

இலங்கை

நாட்டுக்கு அனுப்பகோரி கதறிய இலங்கை தமிழ் இளைஞன்; இரங்கிய நாமல் ராஜபக்ச

Published

on

Loading

நாட்டுக்கு அனுப்பகோரி கதறிய இலங்கை தமிழ் இளைஞன்; இரங்கிய நாமல் ராஜபக்ச

இந்தியாவில் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை அளைஞரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழகத்தில் தஞ்சமடைந்த ஒருவர், தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி மண்டியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட்டிருந்தார்.

Advertisement

தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் அல்லது தம்மை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறித்த நபர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்துடன் இணைந்து உடனடியாக குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமல் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குறித்த இளஞரை இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்குத் தாம் தயாராகவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைமன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர், கடந்த 1997-ம் ஆண்டு உள்நாட்டு போர் நடந்தபோது, தான் படகில் தூங்கிக் கொண்டிருக்கையில்  யாரோ   படகை எடுத்து வந்து தனுஷ்கோடி பகுதியில் இறக்கிவிட்டதாகவும், அதன்பின்னர்  அங்குள்ள அகதிகள் முகாமில் பல இன்னல்களுக்கு  முகம் கொடுத்து   தான் வாழ்வதாகவும், எனவே   தனது குடும்பத்தினரிடம் தன்னை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன