டி.வி
கயல் தொடரில் பிகில் பட நடிகர்!

கயல் தொடரில் பிகில் பட நடிகர்!
கயல் தொடரில் பிகில் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விஜய் விஷ்வா நடிக்கவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கயல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில வாரங்களாக இத்தொடர் டிஆர்பியில் முன்னணியில் உள்ளது.
நடிகை சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் நடித்துவரும் கயல் தொடர் திங்கள்முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
கயல் என்ற கடின உழைப்பாளிப் பெண்ணைச் சுற்றியே இத்தொடரின் கதை நகர்கிறது. கயலுக்கு வரும் அனைத்துத் தடைகளையும் சவால்களையும் எப்படி துணிச்சலாக எதிர்கொள்கிறாள் என்பதே இத்தொடரின் மையக்கரு.
தற்போது, தொடரில் கயலுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கதை அடுத்தக்கட்டத்தை நோக்கிச் செல்கிறது.
இந்த நிலையில், கயல் தொடரில் புதிய பாத்திரத்தை அறிமுகப்படுத்த தொடர் குழு முடிவெடுத்துள்ளது. அந்த புதிய பாத்திரத்தில் திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான நடிகர் விஜய் விஷ்வா(அபி சரவணன்) நடிக்கவுள்ளார்.