உலகம்
சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஷாட்டின் தந்தையின் கல்லைறை எரிப்பு!

சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஷாட்டின் தந்தையின் கல்லைறை எரிப்பு!
ஆட்சி கவிழ்க்கப்பட்ட சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஷாட்டின் தந்தையும், முன்னாள் ஜனாதிபதியுமான ஹாபிஷ் அல் அஷாட்டின் கல்லறையை கிளர்ச்சியாளர்கள் தீயிட்டு எரித்துள்ளனர்.
கல்லறையை எரிக்கும் காட்சிகளும் அதனை சுற்றி கிளர்ச்சியாளர்கள் கோசமிடும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. பஷார் அல் அஷாட்டின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சிரியாவின் ஆட்சி அதிகாரத்தை கிளர்ச்சியாளர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதனையடுத்து பஷார் அல் அஷாட் ரஷ்யாவிற்கு தப்பிச் சென்று அங்கு அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார். சிரியாவிலுள்ள ஹயாட் தாஹரிர் அல் ஷாம் கிளர்ச்சிக் குழு அஷாட்டின் 54 வருட ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி அஷாட்டின் உருவச்சிலைகள் , பதாதைகளை அழிக்கும் செயற்பாட்டில் கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக அஷாட்டின் சொந்த ஊரிலுள்ள அவரது தந்தையின் கல்லறையை கிளர்ச்சிளார்கள் எரித்து அழித்துள்ளனர்.