சினிமா
சூர்யாவுடன் சூப்பர் லேடி…! 20 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ஜோடி…!

சூர்யாவுடன் சூப்பர் லேடி…! 20 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ஜோடி…!
நடிகர் சூர்யா பல ஹிட் படங்களை கொடுத்த நிலையில் அடுத்ததாக சூர்யா45 திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் திர்ஷா நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில் தற்போது படக்குழு தனது எக்ஸ்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமான பதிவொன்றை விட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தின் கதாநாயகியாக நடிகை திர்ஷா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது. சூர்யா மற்றும் திர்ஷா ஜோடியாக மௌனம் பேசியதே மற்றும் ஆறு திரைப்படங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதனை படக்குழு சமீபத்தில் போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படத்தின் இசையை இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைக்கவுள்ளார். 20 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை திர்ஷா மற்றும் நடிகர் சூர்யா இணைந்து நடிக்க உள்ளனமை குறிப்பிடத்தக்கது.