Connect with us

இந்தியா

இண்டிகோ விமானத்தால் சிக்கி தவிக்கும் 400 பயணிகள்!

Published

on

Loading

இண்டிகோ விமானத்தால் சிக்கி தவிக்கும் 400 பயணிகள்!

துருக்கியில் இருந்து டெல்லி மற்றும் மும்பை வரவிருந்த சுமார் 400 இண்டிகோ பயணிகள் இஸ்தான்புல் விமான நிலையில் சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதலில் விமானம் தாமதமாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது என பயணிகள் தங்களின் எக்ஸ் மற்றும் லின்க்டுஇன் தளங்களில் பதிவிட்டுள்ளனர். விமான பயணிகளில் ஒருவர் தனது பதிவில், “முதலில் விமானம் இரண்டு முறை தாமதமானது, பிறகு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

எனினும், 12 மணி நேரம் கழித்து விமானம் புறப்பட தயாராகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் விமான நிலையத்தில் சிக்கித்தவிக்கும் விமான பயணிகளில் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு தங்கும் வசதி, உணவு எதுவும் வழங்கப்படவில்லை. இண்டிகோ நிறுவனம் சார்பில் யாரும் விமான நிலையம் வரவும் இல்லை, பயணிகளை அனுகவும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக ஏர்ஹெல்ப் ஸ்கோர் வெளியிட்ட அறிக்கையின் படி உலகின் மோசமான விமான நிறுவனங்கள் பட்டியலில் இண்டிகோ இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன