Connect with us

இந்தியா

தினமும் 20 லிட்டர் பால் கொடுக்கும் கிர் மாடு… விலை எவ்ளோ தெரியுமா…

Published

on

தினமும் 20 லிட்டர் பால் கொடுக்கும் கிர் மாடு... விலை எவ்ளோ தெரியுமா...

Loading

தினமும் 20 லிட்டர் பால் கொடுக்கும் கிர் மாடு… விலை எவ்ளோ தெரியுமா…

தினமும் 20 லிட்டர் பால் கொடுக்கும் கிர் மாடு… விலை எவ்ளோ தெரியுமா…

Advertisement

தற்போது கால்நடை வளர்ப்பில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். ஏனெனில் கால்நடை வளர்ப்புத் தொழிலின் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க முடியும்.

பசுவின் பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கும். அதனால் பெரும்பாலான மக்கள் நாட்டு இன மாடுகளை வளர்க்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில் அதிகமாக பால் கறக்கும் பசுக்களில் ஒன்றாக கிர் மாடு கருதப்படுகிறது.

இது ஒரு நாளைக்கு 20 முதல் 50 லிட்டர் வரை பால் தருகிறது. ஆனால் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இந்த பசுவை வளர்க்க முடியும். குஜராத்தின் கிர் வனப்பகுதியானது, இந்த மாடுகளின் பிறப்பிடமாகும். அதனால்தான் இந்த இன மாடுகளுக்கு கிர் என்று பெயர் வந்தது.

Advertisement

கிர் காளைகள் 400 கிலோ எடை வரை இருக்கும். இந்த இனத்தைச் சேர்ந்த காளைகள் மற்றும் மாடுகள் அவற்றின் இயல்பு காரணமாக அதன் உரிமையாளர்களுடன் நட்பாக இருக்கும். அப்படிப்பட்ட கிர் பசுவைப் பற்றி தான் நாம் பார்க்கப்போகிறோம்,

கிர் பசு ஆனது ஒரு நாளைக்குச் சராசரியாக 20 லிட்டர் வரை பால் கொடுக்கிறது. இது பால் வியாபாரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று அதன் உரிமையாளர் கூறியுள்ளார். கிருஷ்ணா கிர் மாட்டுப் பண்ணை ஆனது குஜராத் மாநிலம் பவ்நகர் மாவட்டத்தில் உள்ள பொடாட்டில் அமைந்துள்ளது. இங்கு தினமும் 20 லிட்டர் பால் கொடுக்கும் பசு உள்ளது. இந்த மாட்டின் சிறப்பு என்ன? அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

Advertisement

கிருஷ்ணா கிர் மாட்டுப் பண்ணை ஆனது பொடாட்டின் மண்ட்வா கிராமத்தில் அமைந்துள்ளது. 30 வயதான பாரத்பாய் மெர் என்பவர் இந்த கிர் மாட்டுப் பண்ணையை நிர்வகித்து வருகிறார். இங்கு சுமார் 40 முதல் 45 மாடுகள் வளர்க்கப்படுகின்றன.

இது குறித்து மாடு வளர்ப்பு தொழிலாளியான பாரத்பாய் மெர் கூறியதாவது, கடந்த 10 முதல் 12 வருடங்களாகக் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். முன்பு என்னிடம் பல நாட்டு மாடுகள் இருந்தன. ஆனால், கிர் மாடுகளை வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்ததிலிருந்து, கிர் மாடுகளை மட்டுமே வாங்குகிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

மேலும் அவர், தற்போது என்னிடம் அசல் கிர் பசு உள்ளது. இது மிகவும் விலை உயர்ந்த மாடு ஆகும். இந்த கிர் மாட்டை இரண்டு மாதங்களுக்கு முன்பு சுரேந்திரநகரில் இருந்து ரூ.3 லட்சத்துக்கு வாங்கினேன். தற்போது, ​​இந்த மாட்டின் விலை, ரூ. 5 லட்சம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த பசுவின் காதுகள், கண்கள், உயரம், நீளம், சுபாவம் ஆகியவை மற்ற பசுக்களிலிருந்து வேறுபடுகின்றன என்று கூறியுள்ளார். நான் எனது கிர் பசுவிற்கு தினமும் இரண்டு வேளை பருத்திக் கொட்டை, கடலை பிண்ணாக்கு மற்றும் உலர் தானியங்கள் ஆகியவற்றை உணவாகக் கொடுக்கிறேன். இந்த பசு ஆனது ஒரு நாளைக்கு 20 லிட்டர் பாலை தருகிறது என்று கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன