Connect with us

தொழில்நுட்பம்

பழைய கூகுள் பிக்சல் பயனாளரா நீங்கள்.. உங்களுக்காக நற்செய்தியை அறிவித்துள்ளது கூகுள்!

Published

on

பழைய கூகுள் பிக்சல் பயனாளரா நீங்கள்.. உங்களுக்காக நற்செய்தியை அறிவித்துள்ளது கூகுள்!

Loading

பழைய கூகுள் பிக்சல் பயனாளரா நீங்கள்.. உங்களுக்காக நற்செய்தியை அறிவித்துள்ளது கூகுள்!

Advertisement

இந்த விவரங்கள் அனைத்தும் கூகுள் வழங்கும் ஆதரவுப் பக்கத்தில் கிடைக்கின்றன. இதன் வழியாக உங்கள் பிக்ஸல் போன் அதிக ஆயுளையும் ஆதரவையும் பெறுகிறதா என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியும்.

இதில் முக்கியமான செய்தி என்னவென்றால், உங்களிடம் பிக்சல் 6, பிக்சல் 7 சீரிஸ் அல்லது கூகுள் நிறுவனத்திடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிற போன்கள் இருந்தால், கூகுள் இப்போது மேலும் 2 ஓஎஸ் மேம்படுத்தல்களை வழங்கியுள்ளது. பிக்சல் 6 சீரிஸ் 2021-ல் வெளிவந்தது. ஆனால் இந்தியாவில் உள்ளவர்களுக்கு பிக்சல் 6a (Pixel 6a) மாடல் மட்டுமே கிடைத்தது. அதுவும் புதிய OS ரோட் மேப்பும் அதில் சேர்க்கப்பட்டிருந்தது.

Advertisement

– பிக்சல் 6a

– பிக்சல் 6

– பிக்சல் 6 ப்ரோ

Advertisement

– பிக்சல் 7a

– பிக்சல் 7

– பிக்சல் 7 ப்ரோ

Advertisement

– பிக்சல் ஃபோல்ட்

இவற்றில் இந்தியாவில் உள்ளவர்கள் முழு பிக்சல் 7 சீரிஸ் மற்றும் பிக்சல் 6a மாடல்களை வாங்க முடியும். பிக்சல் 7 சீரிஸ் 2022 -ல் வெளிவந்தது. அப்படியென்றால் இந்த மாடல் உங்களிடம் இருந்தால் இதற்கு இனி ஐந்து வருட OS மேம்படுத்தல்களைப் பெறுவீர்கள். எனவே, உங்களிடம் பிக்சல் 7ஏ, பிக்சல் 7 அல்லது 7 ப்ரோ மாடல் இருந்தால், 2027-ல் வரவுள்ள ஆண்ட்ராய்டு 18 அப்டேட்டை பெறுவீர்கள்.

கூகிள் அதன் பிக்சல் போன்களுக்கான OS ஆதரவை தருவதில் பெரும்பாலும் நல்லவிதமாகவே செயல்படுகிறது. தற்போது வரை இதற்கு 3 வருட ஆதரவை வழங்குகிறது. கடந்த ஆண்டு பிக்சல் 8 சீரிஸ் வெளிவந்தபோது, எப்போதும் இல்லாத வகையில் 7 வருட OS மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளுக்கு உறுதியளித்தது. இந்த மாற்றங்கள் அனைத்தும் பழைய பிக்ஸல் போன்களுக்கானவை. ஆகவே இனி சில வருடங்களாவது இதை பயன்படுத்த முடியும். இவற்றை நீங்கள் உடனடியாக மேம்படுத்த வேண்டிய அவசியமில்லை.

Advertisement

பல ஆண்டுகளாக கூகுள் அதன் சாதனங்களின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. மேலும் நீடித்த OS ஆதரவை வழங்கும் அதே வேளையில், அதன் தயாரிப்புகளும் அதே கால அளவிற்கு தாங்கும் வகையில் இருக்க வேண்டும் என பயனாளர்கள் விரும்புகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன