இந்தியா
Tamil nadu Rains | இன்று உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Tamil nadu Rains | இன்று உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இது மேலும் வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
இது தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்பதால், வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. இதனால் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்காலிலும் நாளை (16.12.2024) கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
நாளை மறுநாள், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, புதுவை ஆகிய இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
இதே போல, வரும் புதன் கிழமை கடலூர், விழுப்புரம், புதுவையில் ஆகிய இடங்களில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.