சினிமா
5 கோடியை அசால்ட்டாக வீசியடித்த எஸ்கே.! இனி பஞ்சாயத்துக்கு இடமில்லை.! வெளியான உண்மை

5 கோடியை அசால்ட்டாக வீசியடித்த எஸ்கே.! இனி பஞ்சாயத்துக்கு இடமில்லை.! வெளியான உண்மை
சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் சுமார் 300 கோடிகளைத் தாண்டி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக காணப்படுகின்றது.இந்த நிலையில், வலைப்பேச்சு அந்தணன் கடந்த வாரம் சிவகார்த்திகேயன் தனக்கு இருந்த 5 கோடி ரூபாய் கடனை கொடுத்து முடித்ததாகவும், இதனால் இனிமேல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் படங்களில் எந்த ஒரு பிரச்சனையும் இடம்பெறாது எனவும் தெரிவித்துள்ளார்.d_i_aஅதன்படி அவர் கூறுகையில், ஒரு படம் ரிலீஸ் ஆவது என்பது ஒரு டெலிவரிக்கு நிகரான கஷ்டமாக காணப்படும். அதே நேரத்தில் அந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கும் படத்தின் ரிலீஸ் என்பது மிகப் பெரிய எக்சைட்டட் ஆக காணப்படும்.கடந்த காலத்தில் சிவகார்த்திகேயனுக்கு விநியோகிஸ்தர்கள் போட்ட பெருந்தொகை கடனை பல்வேறு கட்டமாக கட்டி முடித்தார். இறுதியில் கொட்டுக்காளி படத்திற்கு முன்பு 5 கோடி ரூபாக்கான கையெழுத்தை போட்டுக் கொடுத்தார். சிவகார்த்திகேயன் கையெழுத்து போட்ட பிறகு தான் அந்த படத்தையே ரிலீஸ் பண்ணினாங்க..தற்போது அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் ரேஞ்சே வேற மாதிரி ஆகிவிட்டது. இதனால் போனவாரம் அந்த ஐந்து கோடி ரூபாயை முழுமையாக செட்டில் பண்ணி உள்ளார் சிவகார்த்திகேயன்.இதனால் இனி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் படங்கள் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்ற பஞ்சாயத்து இருக்காது. இனி எல்லா படமும் ஃப்ரியா ரிலீஸ் ஆகும்.. எல்லா பிரச்சனையும் முடிந்து என வலைப்பேச்சு அந்தணன் தனது பேட்டியில் தெரிவித்து உள்ளார்.