சினிமா
இளையராஜா பயோபிக் உருவாகுமா? இல்லையா? Latest தகவல்

இளையராஜா பயோபிக் உருவாகுமா? இல்லையா? Latest தகவல்
இளையராஜா பயோபிக் படம் உருவாகுமா? இல்லையா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத் துள்ளார். தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள் வாங்கியுள்ளார். சிம்பொனியும் இசையும் அமைத்துள்ளார்.
அவரது வாழ்க்கை வரலாறு படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்களும், சினிமாத்துறையினரும் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, இந்தி இயக்குனர் பால்கி இதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். அதில், தனுஷ் நடிப்பதாகவும் உறுதியானது.
இப்படத்தை பிரபல நிறுவனம் தயாரிப்பதாகவும், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில், இளையராஜாவாக தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.
இதன் தொடக்க விழாவில், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனால், அடுத்த அப்டேட் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
சில நாட்களுக்கு முன்பு, இளையராஜா பயோபிக் படம் டிராப் ஆவதாக தகவல் வெளியானது. இப்போது, அப்படி எல்லாம் இல்லை. இப்பட த்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
அடுத்தாண்டு தொடக்க்கத்தில் இப்பட த்தின் அடுத்த அப்டேட்டும், இதில் பணியாற்றும் கலைஞர்கள், நடிகர்கள் பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என தகவல் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.