Connect with us

தொழில்நுட்பம்

ஆதார் அப்டேட் செய்ய மறந்து விட்டீர்களா? டென்ஷன் வேண்டாம்; இலவச புதுப்பித்தலுக்கான கால அவகாசம் நீட்டிப்பு

Published

on

Aadhar update

Loading

ஆதார் அப்டேட் செய்ய மறந்து விட்டீர்களா? டென்ஷன் வேண்டாம்; இலவச புதுப்பித்தலுக்கான கால அவகாசம் நீட்டிப்பு

ஆதார் அட்டையை இலவசமாக ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.Unique Identification Authority of India என்பதன் மூலமாக ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக ஆதார் அட்டையை இலவசமாக ஆன்லைன் மூலம் புதுப்பித்துக் கொள்வதற்கு கடந்த டிசம்பர் 14-ஆம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆதாரை இலவசமாக புதிப்பித்துக்கொள்ள அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இது குறித்த அறிவிப்பை ஆதார் ஆணையம் தங்கள் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். #UIDAl extends free online document upload facility till 14th June 2025; to benefit millions of Aadhaar Number Holders. This free service is available only on #myAadhaar portal. UIDAl has been encouraging people to keep documents updated in their #Aadhaar. pic.twitter.com/wUc5zc73kh ஆதார் விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பதற்கான வழிமுறைகள்:1. அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்திற்குச் செல்லவும்.2. உங்கள் ஆதார் எண், கேப்ட்சா குறியீடு மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஆகியவற்றை உள்ளிடவும்.3. ‘ஆவணப் புதுப்பிப்பு’ பகுதிக்குச் சென்று உங்களின் தற்போதைய விவரங்களைச் சரிபார்க்கவும்.4. கீழ்தோன்றும் மெனுவிலிருந்து பொருத்தமான ஆவண வகையைத் தேர்ந்தெடுத்து உங்கள் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றவும்.5. சேவை கோரிக்கை எண்ணைக் குறித்துக்கொள்ள மறக்காதீர்கள். இது உங்கள் ஆதார் புதுப்பிப்பு கோரிக்கையின் செயல்முறை நடவடிக்கையை கண்காணிக்க உதவும்.கைரேகைகள், கருவிழி ஸ்கேன்கள் அல்லது புகைப்படங்கள் போன்ற பயோமெட்ரிக் தகவல் தொடர்பான புதுப்பிப்புகளுக்கு, நீங்கள் ஆதார் பதிவு மையம் அல்லது ஆதார் சேவா கேந்திராவிற்குச் செல்ல வேண்டும். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன