உலகம்
ஜனவரி முதல் ஆறு மாதங்கள் முக்கியமானவை: சீன வெளிவிவகார அமைச்சு அதிகாரி!

ஜனவரி முதல் ஆறு மாதங்கள் முக்கியமானவை: சீன வெளிவிவகார அமைச்சு அதிகாரி!
ஜனவரி முதலான ஆறு மாதங்கள் அமெரிக்க – சீன இராஜதந்திர உறவில் முக்கியத்துவம் மிக்கதாக இருக்கும் என்று சீன வெளிவிவகார அமைச்சின் கொள்கை வகுப்பு பிரிவு உறுப்பினரும் புடன் பல்கலைக்கழக பீடாதிபதி வூ சின்போ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டரம்ப் ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்க உள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சீனாவும் அமெரிக்காவும் பொருளாதார மற்றும் இராஜதந்திர ஒப்பந்தங்களை மேற்கொள்வதன் மூலம் முரண்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். இராணுவ மோதல் இல்லாவிட்டாலும் கூட, வரிக் கொள்கைகள் தொடர்பான முரண்பாடுகள் கூட இரு தரப்பு இராஜதந்திர பகுதிகளை பாதிப்பதாக அமையலாம். அவற்றை தவிர்ப்பது இன்றியமையாதது என்று கூறியுள்ளார்.