இலங்கை
இ.போ.சபைக்குச் சொந்தமான பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்

இ.போ.சபைக்குச் சொந்தமான பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்
யாழ்ப்பாணம்- பருத்தித்துறையிலிருந்து கட்டைக்காடு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பருத்தித்துறையிலிருந்து நேற்று முன்தினம் (24) மாலை 6.15 மணிக்கு புறப்பட்ட பேருந்து வடமராட்சி கிழக்கு மாமுனைப் பகுதிக்கு சென்றபோது இனம் தெரியாதோரால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால். பேருந்தின் ஜன்னல் கண்ணாடி முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.