இலங்கை
பீகார் புத்த கயாவில் வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அனுர

பீகார் புத்த கயாவில் வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அனுர
இந்தியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (17) காலை பீகாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
மகாபோதி சென்ற ஜனாதிபதி அனுரவை , கயா விமான நிலையத்தில் வைத்து மூத்த அரச அதிகாரிகள் வரவேற்றனர்.
அத்துடன், புத்த கயாவின் மகாபோதி ஆலய வளாகத்திற்குள் சென்ற ஜனாதிபதி அங்கு அதிகாரிகளுடன் வழிபாட்டில் ஈடுபட்டார்.
நேற்றையதினம் உத்தியோகபூவ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அனுர, அங்கு பிரதமர் மோடி , ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பல முக்கியஸ்தர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டிருந்தார்.
அதேவேளை ஜனாதிபதியான பின் அனுரகுமார மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.