Connect with us

வணிகம்

எல்ஐசி பீமா சகி யோஜனா: தகுதி, உதவித்தொகை மற்றும் அப்ளிகேஷன் விவரங்கள்…!

Published

on

எல்ஐசி பீமா சகி யோஜனா: தகுதி, உதவித்தொகை மற்றும் அப்ளிகேஷன் விவரங்கள்...!

Loading

எல்ஐசி பீமா சகி யோஜனா: தகுதி, உதவித்தொகை மற்றும் அப்ளிகேஷன் விவரங்கள்…!

Advertisement

எல்ஐசி பீமா சகி திட்டத்தை ஹரியானா மாநிலம் பானிபட்டில் பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார். 18 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைத்துப் பெண்களும் குறைந்தபட்ச தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

கிராமப்புறங்களில் பலருக்கு இன்சூரன்ஸ் சென்றடையவில்லை. இதன் காரணமாக, இப்பகுதி பெண்களுக்கு காப்பீட்டு பயிற்சி அளித்து, அவர்களை எல்ஐசி ஏஜென்ட்களாக மாற்றுவதன் மூலம், ஏராளமானோருக்கு காப்பீட்டுகளை வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில், பெண்களுக்கு முதலில் இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் எல்ஐசி ஏஜென்ட்களாக பணியாற்றுகிறார்கள்.

Advertisement

எல்ஐசி பீமா சகி யோஜனா என்பது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ஒரு லட்சியத் திட்டமாகும். இதன் கீழ் 18 முதல் 70 வயது வரையிலான பெண்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் எல்ஐசி ஏஜென்ட்களாகவும், எல்ஐசியில் டெவலப்மென்ட் அதிகாரிகளாகவும் ஆவதற்கு வாய்ப்பைப் பெறுவார்கள்.

பீமா சகி யோஜனா என்பது பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மூன்று ஆண்டு உதவித்தொகை திட்டமாகும். இது நிதிச் சேவைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்க சிறப்புப் பயிற்சி மற்றும் உதவித்தொகைகளை வழங்குகிறது. அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.7,000 முதல் ரூ.5,000 வரை நிலையான உதவித் தொகையாகப் பெறுவார்கள். மேலும், பாலிசியைப் பெறுவதற்கான கமிஷனும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தை முடித்த பிறகு, பயிற்சி பெற்றவர்கள் எல்ஐசி ஏஜென்ட்களாக பணியாற்றலாம் மற்றும் எல்ஐசியில் டெவலப்மென்ட் ஆபிஷர் பதவியையும் பெறுவார்கள்.

Advertisement

18 முதல் 70 வயது வரை உள்ள பெண்கள் இத்திட்டத்தில் பங்கேற்கலாம்.

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

LIC ஊழியர்கள் அல்லது ஏஜென்ட்களின் உறவினர்கள், ஓய்வுபெற்ற LIC ஊழியர்கள், முன்னாள் ஏஜென்ட்கள் மற்றும் தற்போதைய ஏஜென்ட்கள் ஆகியோர் தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

Advertisement

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். முதல் ஆண்டில் நீங்கள் 24 பேருக்கு காப்பீடு செய்து, குறைந்தபட்சம் முதல் ஆண்டு கமிஷன் ரூ.48,000 (போனஸ் கமிஷன் தவிர்த்து) பெற வேண்டும். முதல் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் ரூ.7,000 உதவித்தொகை கிடைக்கும். இரண்டாம் ஆண்டில் உதவித்தொகை ரூ.6,000. ஆனால், இதற்கு முதல் ஆண்டில் செய்யப்பட்ட பாலிசிகளில் குறைந்தது 65 சதவீதம் இரண்டாவது ஆண்டு முடியும்வரை நடைமுறையில் இருப்பது அவசியம். மூன்றாம் ஆண்டில் ரூ.5,000 உதவித்தொகை கிடைக்கும். இதற்கு, இரண்டாவது ஆண்டில் செய்யப்பட்ட பாலிசிகளில் குறைந்தபட்சம் 65 சதவீத பாலிசிகள் மூன்றாம் ஆண்டு முடியும்வரை நடைமுறையில் இருக்க வேண்டியது அவசியம்.

விண்ணப்பதாரர்கள் பின்வரும் செல்ஃப் அட்டெஸ்டேட் டாக்குமெண்ட்களை அப்ளிகேஷன் ஃபார்ம் உடன் சமர்ப்பிக்க வேண்டும்:

Advertisement

வயது சான்று

முகவரி சான்று

கல்வி தகுதிச் சான்று

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன