இலங்கை
வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு!

வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு!
ஹோமாகம பனாகொட பெலடகொட பிரதேசத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் வியாபாரிக்கு சொந்தமானது என கூறப்படும் வீடொன்றின் மீது புதன்கிழமை (18) காலை பல துப்பாக்கிச் சூட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் உள்ள மற்றுமொரு முக்கிய போதைப்பொருள் வியாபாரியின் வழிகாட்டலின் பேரில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக மெகொட பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.