இலங்கை
யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் விபத்து – ஐவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் விபத்து – ஐவர் படுகாயம்!
கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து ஒன்று, சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 4மணியளவில் ஏ-9 வீதி, மிருசுவில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்;
கொழும்பிலிருந்து பயணித்த அதிநவீன சொகுசு பேருந்தும், அதே திசையில் பயணித்த மரப் பலகைகளை ஏற்றிய சென்ற சிறிய ரக உழவு இயந்திரமும் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியும், பேருந்தின் நடத்துனருமே படுகாயம் அடைந்துள்ளதுடன், குறித்த பேருந்தின் முன் பகுதி முற்றாக சேதமடைந்ததால் சாரதி மற்றும் பேருந்தில் இருந்தவர்களை, பொதுமக்கள் சேர்ந்து ஒரு மணித்தியாலப் போராட்டத்தின் பின்னரே மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)