இந்தியா
மாதம் ரூ. 9,250 வருமானம் வேண்டுமா.. உடனே POMIS திட்டத்தில் இணையுங்கள்..!

மாதம் ரூ. 9,250 வருமானம் வேண்டுமா.. உடனே POMIS திட்டத்தில் இணையுங்கள்..!
POMIS திட்டன் முழு விவரங்கள்
அஞ்சல் துறையில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. வங்கிகளைப் போல தபால் நிலையங்களிலும் பொதுமக்கள் பணத்தை சேமித்து வைக்க ஆரம்பித்து விட்டனர். இதற்குகாரணம் தபால் நிலையங்கள் நேரடியாக மத்திய அரசின் மூலம் செயல்பட்டு வருவது தான். இதனுடைய வட்டி விகிதமும் அதிகமாக இருப்பதுடன், சேமிக்கும் பணத்தின் மீது நம்பகத்தன்மை அதிகரிக்கிறது.
இந்நிலையில் அஞ்சலக சேமிப்பு திட்டம் ஒன்றில் மக்கள்இணைவதன் மூலம் மாதம் குறைந்தபட்சம் ரூபாய் 5,550 முதல் அதிகபட்சமாக ரூபாய் 9,250 வரை பெறுவதற்கு வழிவகைகள் உள்ளன.இதற்கு மக்கள் POMISதிட்டத்தில் இணைய வேண்டும். இது ஐந்தாண்டு சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அதாவது சிங்கிள் அக்கவுண்ட் மற்றும் ஜாயிண்ட் அக்கவுண்ட் ஆகும்.
ஜாயிண்ட் அக்கவுண்டில் அதிகபட்சமாக மூன்று பேர் வரை இணைய முடியும். சிங்கிள் அக்கவுண்ட் திட்டத்தில் அதிகபட்சமாக ஒன்பது லட்சம் வரையும் ஜாயிண்ட் அக்கவுண்ட் திட்டத்தில் அதிகபட்சமாக 15 லட்சம் வரையும் 5 ஆண்டுகள் வரை நாம் முதலீடு செய்யலாம். இந்த சேமிப்பு திட்டத்திற்கு 7.4 சதவீதம் ஆண்டுக்கு வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி தொகை 5 ஆண்டுக்கு பிறகு பயனாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பெற முடியும்.
அதன்படி ஜாயிண்ட் அக்கவுண்டில் ஒருவர் ஐந்து ஆண்டில் 15 லட்சத்தை சேமித்தால், அவருக்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி கிடைக்கும்.அதன்படி ஆண்டுக்கு 1.11 லட்சம் வட்டியாக கிடைக்கும். இதனை 12 மாதங்களுக்கு பிரித்தால் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 9,250 கிடைக்கும். இதனை அவர்கள் மாதம் தோறும் பெற்றுக் கொள்ள முடியும். சிங்கிள் அக்கவுண்ட் முறையில் ஒன்பது லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு 66,600 வட்டியாக கிடைக்கும்.அதாவது ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி கிடைக்கும். அதன்படி பார்த்தால் ஒவ்வொரு மாதமும் 5,550 பெற முடியும்.
ஒருவேளை வட்டி தொகையை மாதம் தோறும் எடுக்காத பட்சத்தில், அந்த தொகை அசல் தொகையுடன் சேர்ந்து கொண்டே இருக்கும்.இந்த திட்டத்தில் பயனடைய ஆதார் கார்டு பான் கார்டு தேவைப்படுகிறது. மேலும் செலுத்தக்கூடிய தொகையை பணமாகவோ, காசோலையாகவோ டெபாசிட் செய்து கொள்ளலாம்.