இந்தியா
Rain Alert | “இந்த 4 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில்…” – வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்த எச்சரிக்கை

Rain Alert | “இந்த 4 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில்…” – வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்த எச்சரிக்கை
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 16) உருவானது. இது வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி சென்னைக்கு அருகில் வந்துள்ளதாகவும், இதனால் இன்று மற்றும் நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.
கனமழை பெய்யப்போவதாலும், அணைகள் நிரம்புவதாலும் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரி கரையோரமும் மழைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் டிசம்பர் 26 – 27 ஆம் தேதிகளில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.