Connect with us

இந்தியா

‘அம்பேத்கர் பற்றிய எனது பேச்சை காங்கிரஸ் திரித்து விட்டது’: அமித் ஷா குற்றச்சாட்டு

Published

on

Amit Shah on row over BR Ambedkar remark Tamil News

Loading

‘அம்பேத்கர் பற்றிய எனது பேச்சை காங்கிரஸ் திரித்து விட்டது’: அமித் ஷா குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்ச்சையாக பேசியதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தனது மக்களவை உரையில் பி.ஆர்.அம்பேத்கரை அவமரியாதை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர்கள் தனது வார்த்தைகளை திரித்து விட்டதாகவும், அவர்கள் அம்பேத்கருக்கு நினைவிடம் கூட கட்டவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.ஆங்கிலத்தில் படிக்கவும்:Amit Shah on row over BR Ambedkar remarkஇந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் அமித்ஷா பேசுகையில், “எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டுமே வைத்து குறை சொல்கிறார்கள். எனது பேச்சை திரித்து கூறுகிறார்கள். நான் பேசியதை முழுமையாக கேளுங்கள். நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல. காங்கிரஸ்தான் 2 முறை அம்பேத்கரை தோல்வி அடையச் செய்தது. அம்பேத்கர் பற்றி நேரு குறை கூறியிருக்கிறார்.பா.ஜ.க.வும், மோடி அரசும்தான் அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கிறது. பா.ஜ.க.வினர் அம்பேத்கரின் கொள்கையை பின்பற்றுகிறார்கள். நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அம்பேத்கரை குறைத்து மதிப்பிட்டு இருக்கிறார்கள். அம்பேத்கரின் வரலாற்று புகழை உலகம் முழுவதும் நிலைநாட்டியது பா.ஜ.க. அரசுதான். காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கரின் சட்டத்திற்கு எதிரானவர்கள்.எமர்ஜென்சியை அமல்படுத்த இந்திய அரசியல் சாசனத்தை காங்கிரஸ் கட்சி ஒதுக்கிவைத்தது. நமது நாட்டின் ராணுவத்தினரை கூட காங்கிரஸ் எப்போதும் அவமதித்தே வருகிறது. இந்தியாவை பிளவுபடுத்தும் வகையில் அந்நிய மண்ணில் காங்கிரஸ் கருத்து தெரிவித்து வருகிறது. அம்பேத்கரின் பிறந்தநாளை கூட காங்கிரஸ் கட்சி கொண்டாடவில்லை.ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Congress is anti-Ambedkar, anti-reservation, anti-Constitution’: Amit Shah defends remarks amid Opposition backlashகாங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இல்லாதபோதுதான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிந்தது. பா.ஜ.க. அரசுதான் அம்பேத்கரின் சட்டங்களை அமல்படுத்துகிறது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு நன்மை செய்வது பா.ஜ.க. அரசுதான்.” என்று அவர் கூறினார். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன