Connect with us

இந்தியா

மும்பை படகு விபத்து: பலி எண்ணிக்கை 13-அக உயர்வு: முதல்வர், பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!

Published

on

Mumbai Boat Accident

Loading

மும்பை படகு விபத்து: பலி எண்ணிக்கை 13-அக உயர்வு: முதல்வர், பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!

மும்பை கடற்கரையில் கடற்படை கப்பல் கட்டுப்பாட்டை இழந்து படகு மீது மோதியதில் ஒரு கடற்படை வீரர் மற்றும் கடற்படை வேகப் படகில் இருந்த இரண்டு ஊழியர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.Read In English: Mumbai Boat Accident Live Updates: 13 killed after Navy craft hits ferry boat with 110 on board off Mumbai’s Gateway of Indiaமும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து எலிபெண்டா தீவுக்கு சுமார் 110 பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. மாலை 4 மணியளவில் கடற்படைக் கப்பல் இயந்திர சோதனை மேற்கொண்டபோது கட்டுப்பாட்டை இழந்து படகு மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் படக்கில் இருந்த பயணிகள் தண்ணீரில் மூழ்கிய நிலையில், இந்திய கடலோர காவல்படை மற்றும் மும்பை மரைன் காவல்துறையின் உதவியுடன் உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது.இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடற்படைக் கப்பல் இயந்திர சோதனைக்கு சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து மும்பை கரஞ்சாவில் இருந்து நீல் கமல் என்ற பயணிகள் படகு மீது மோதியது. உடனடியாக தொடங்கப்பட்ட மீட்பு பணியில், 4 கடற்படை ஹெலிகாப்டர்கள், 11 கடற்படை கப்பல்கள், ஒரு கடலோர காவல்படை படகு மற்றும் மூன்று மரைன் போலீஸ் படகுகள் மூலம் இதுவரை, 99 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், ராஜநாத் சிங் இரங்கல் தெரிவித்ததோடு, “காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை மூலம் விரிவான தேடல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளார். அதேபோல் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்  கூறுகையில், படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். விபத்து குறித்து கடற்படை மற்றும் மாநில அரசு அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதனிடையே, மும்பை கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் வருத்தம் அளிப்பதாக கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர்” என்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், கருணைத் தொகையாக உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ2 லட்சம் ரூபாய்.விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா தலா 50,000. வழங்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன