விநோதம்
இவையெல்லாம் மாரடைப்புக்கான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்.. என்னென்ன தெரியுமா..?

இவையெல்லாம் மாரடைப்புக்கான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்.. என்னென்ன தெரியுமா..?
உலகளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் மாரடைப்பாகும். மாரடைப்பு திடீரென தாக்கும் திறன் கொண்டதாக உள்ளது. முன் அறிகுறிகள் ஏதுமின்றி திடீரென ஏற்படக்கூடியதாக மாரடைப்பு பிரச்னை உள்ளது.
ஒருவேளை வயிற்று எரிச்சல், நெஞ்சரிச்சல் மற்றும் செரிமானக் கோளாறு போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும், அதை பலரும் பெரிதாக எடுத்துகொள்வது கிடையாது. அந்த வகையில் மாரடைப்புக்கான சில எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து பார்க்கலாம். மாரடைப்பு அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் உங்கள் உயிரையோ அல்லது உங்களைச் சுற்றியுள்ள ஒருவரின் உயிரையோ காப்பாற்ற முடியும் என்று இதய நோய் நிபுணர் ஜாக்குலின் டாமிஸ்-ஹாலண்ட், தெரிவித்துள்ளார்.
மாரடைப்பின் 7 ஆரம்ப அறிகுறிகள்:
இந்த அறிகுறிகளை நீங்கள் அலட்சியப்படுத்தினால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், உங்கள் இதயத்தில் உள்ள இரத்த நாளங்களில் ஒன்றில் அடைப்பு ஏற்படுவதால் மாரடைப்பு ஏற்படுகிறது. அடைப்பு ஏற்பட்டால் இரத்தம் உங்கள் இதயத்திற்கு செல்ல முடியாது. எனவே இரத்தம் இல்லாமல், உங்கள் இதய தசை இறக்கத் தொடங்குகிறது. எனவே இரத்த ஓட்டம் விரைவாக மீட்டெடுக்கப்படாவிட்டால், நிரந்தர இதய பாதிப்பு அல்லது மரணம் கூட ஏற்படலாம்.
ஆண்களை விட பெண்களுக்கு எச்சரிக்கை அறிகுறிகள் வேறுபட்டதா?
மாரடைப்பு அறிகுறிகள் பெரும்பாலும் ஆண்களில் ‘வழக்கமானவை’ என்றும், பெண்களில் ‘வித்தியாசமானவை’ என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு புதிய ஆய்வில் அறிகுறிகள் பாலினங்கள் இடையே வேறுபட்டாலும், ஓரு சில ஒற்றுமைகளும் இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க:
Pregnancy Symptoms: பெண்கள் கர்ப்பமாக இருப்பதை சொல்லும் ஆரம்ப கால 10 அறிகுறிகள்… என்னென்ன தெரியுமா?
இது பெண்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்தும் ஆபத்து அறிகுறிகளாகும். மாரடைப்புக்கு பொதுவான அறிகுறியான மார்பு வலி போன்ற உணர்வு அல்லது அஜீரணம் போன்ற அசௌகரியம் ஆகியவை பெண்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாரடைப்பிற்குப் பிறகு இறப்பதற்கான வாய்ப்புகள், ஆண்களை விட பெண்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மாரடைப்புக்கான ஆபத்து காரணங்கள்:
இதையும் படிக்க:
மார்பக புற்றுநோய் முதல் நிலை அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா..? பெண்களே உஷார்..!
911ஐ எப்போது அழைக்க வேண்டும்?
உங்களுக்கு மார்பு வலி அல்லது அழுத்தம் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் அல்லது அது மீண்டும் வந்தால் 911 அல்லது உள்ளூர் அவசர எண்ணை அழைக்க வேண்டும்.