Connect with us

இந்தியா

நாடாளுமன்ற வளாக மோதல்; 2 பா.ஜ.க எம்.பிக்கள் காயம்: ராகுல் மீது வழக்குப் பதிவு

Published

on

par schu

Loading

நாடாளுமன்ற வளாக மோதல்; 2 பா.ஜ.க எம்.பிக்கள் காயம்: ராகுல் மீது வழக்குப் பதிவு

நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் என்.டி.ஏ மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி கட்சிகள் நேற்று போராட்டம் நடத்தி நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜகவின் இரண்டு எம்.பி.க்கள் காயமடைந்ததை அடுத்து, பாஜக அளித்த புகாரின் பேரில், டெல்லி காவல்துறை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பாரதீய நியாய சன்ஹிதாவின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளளது. ராகுல் தள்ளி விட்டதாக பாஜக அளித்த புகாரில் டெல்லி காவல்துறை அவர் மீது  வழக்குப் பதிவு செய்துள்ளது. காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கேவை பாஜக எம்.பி.க்கள் தரையில் தள்ளி, காயம் ஏற்படுத்தியதாகக் காங்கிரஸ் அளித்த புகாரில் போலீஸார் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.பார்லிமெண்ட் குளிர்கால கூட்டத் தொடரின் இறுதி நாளில், டாக்டர் பி.ஆர் அம்பேத்கரின் பெயரை இழிவுபடுத்தியதாக ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, அவையின் உறுப்பினர்கள், கட்டடத்தின் பிரதான நுழைவாயிலான மகர் துவாரில் இரு கட்சிகளும் தள்ளுமுள்ளு மற்றும் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி போலீசில் புகார் அளித்தன. இரண்டு பா.ஜ.க எம்.பி.க்களுக்கு காயம் ஏற்பட்டு, குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகள் கூறி சபாநாயகரிடம் மனுக்கள் அளித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் தற்போது எம்.பியுமான பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோரை ராகுல் காந்தி தள்ளியதில் விழுந்து காயம் அடைந்ததாக பாஜக குற்றம்சாட்டிய நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள் காந்தியை உடல் ரீதியாக தாக்கியதாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. .நாகாலாந்தின் பாஜக எம்.பியான எஸ். ஃபாங்னான் கொன்யாக், ராஜ்யசபாவில், போராட்டத்தின் போது காந்தி தன்னிடம்  “நெருங்கி வந்தபோது” தான் “உண்மையில் அசௌகரியமாக உணர்ந்தேன்” என்று கூறினார். “அவர் என்னைக் நோக்கி கத்த ஆரம்பித்தார், இது எதிர்க்கட்சித் தலைவருக்கு மிகவும் பொருத்தமற்றது என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.இதற்கிடையில், சபாநாயகருக்கு கார்கே கடிதம் எழுதியதில், “பாஜக எம்.பி.க்களால் உடல்ரீதியாகத் தான் தாக்கப்பபட்டு தள்ளப்பட்டதாக” கூறி இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினார்.பாரதிய ஜனதா கட்சியின் வதோதரா எம்.பி ஹேமங் ஜோஷி, காந்திக்கு எதிரான புகாரின் பேரில், கட்சி எம்பிக்கள் அனுராக் தாக்கூர் மற்றும் பன்சூரி ஸ்வராஜ் ஆகியோருடன் பார்லிமென்ட் தெரு காவல் நிலையத்திற்குச் சென்றார்.டிசிபி (புது டெல்லி) தேவேஷ் மஹ்லா கூறுகையில், “ராகுல் காந்தி மற்றும் பிறர் மீது சட்டப் பிரிவு  115 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 117 (தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்), 131, 351  மற்றும் 3(5) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்றார்.காங்கிரஸ் அளித்த புகார் குறித்து மஹ்லாவிடம் கேட்டபோது, ​​“மற்ற புகார் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. புகார் குறித்து ஆராய்ந்து வருகிறோம்” என்றார்.ராகுல் காந்திக்கு எதிரான எஃப்ஐஆர் குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “நாங்களும் புகார் அளித்துள்ளோம். காவல்துறை அதை எப்ஐஆராக மாற்ற காத்திருக்கிறோம்” என்றார்.ஆங்கிலத்தில் படிக்க:  Day-long faceoff: Two BJP MPs injured, police lodge FIR against Rahul Gandhiகேராவிடம் எஃப்ஐஆரில் பாஜக குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டதற்கு,  “என்ன நடந்தது என்பதை  இந்த உலகம் பார்த்தது. சட்டத்தின் போக்கில் செல்கிறோம். சட்டரீதியாக போராடுவோம். எங்கள் புகாரை எஃப்ஐஆராக மாற்ற நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்” என்றார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன