இந்தியா
நகை வாங்க நல்ல சான்ஸ்… மூன்றாவது நாளாக குறைந்த தங்கம் விலை!

நகை வாங்க நல்ல சான்ஸ்… மூன்றாவது நாளாக குறைந்த தங்கம் விலை!
தங்கம் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று (டிசம்பர் 20) குறைந்துள்ளது.
தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்தாலும், கடந்த சில மாதங்களாக விலை கூடி நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது.
அதன் பிறகு ஏற்றம் இறக்கமாக இருந்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.57,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று டிசம்பர் 19 சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.56,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில் இன்று (டிசம்பர் 20) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,320க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்துள்ளது.
3 நாட்களில் சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது தங்கம் விலை.
வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.98-க்கும், ஒரு கிலோ ரூ.1,000 குறைந்து ரூ.98,000-க்கும் விற்பனையாகிறது.