இந்தியா
மகாராஷ்டிராவில் பயங்கர விபத்து; அரபிக்கடலில் மூழ்கிய சுற்றுலாப் படகு

மகாராஷ்டிராவில் பயங்கர விபத்து; அரபிக்கடலில் மூழ்கிய சுற்றுலாப் படகு
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரத்தில், மும்பை இந்தியாவின் நுழைவுவாயில் பகுதியில் இருந்து சுற்றுலாத்தலமான எலிபென்ட்டா தீவுக்கு பயணிகள் பெரிய படகு ஒன்று அரபிக் கடலில் இன்று மாலை பயணித்துக்கொண்டு இருந்தது. இந்தப் படகில் 100-க்கும் மேற்பட்டோர் பயணித்துக்கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் கடலில் ஒரு சிறிய ரக படகு ஒன்று மிகவும் வேகத்துடன் வந்தது. திடீரென எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த அந்த சிறிய ரக படகு அந்த சுற்றுலா பயணிகள் பெரிய படகின் மீது மோதியது. இதனால், அந்த படகில் சேதம் ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கத் துவங்கியது.
படகு கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கத் துவங்கியதும், அதில் இருந்த சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர். உடனே படகில் இருந்த சிலர் பாதுகாப்பு கவசங்களை உபயோகிக்கத் துவங்கினர். அதற்குள் கடற்படையினருக்கு இந்த விபத்து குறித்து தகவல் சென்றது. அதனைத் தொடர்ந்து உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு கடற்படையினர் விரைந்து சென்றனர்.
Shocking Video: लाइव वीडियो: मुंबई में इंडिया गेट के पास की घटना
एक स्पीडबोट ने तेज गति से दूसरी नाव को टक्कर मार दी
नाव पर 60 यात्री सवार थे।#MUMBAI #BOAT pic.twitter.com/juabBdwgWa
அங்கு விரைந்த கடற்படையினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டபோது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்து உடனடியாக, அங்கு கடற்படையின் 11 படகுகளும், கடலோர காவல் துறையின் 3 படகுகளும், கடலோரக் காவல் படையின் ஒரு படகும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணியில் 4 ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், அந்தப் பகுதியில் இருந்த மீனவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இருந்து தற்போது வரை 101 பேர் வரை மீட்டிருப்பதாகவும், ஐந்து பேர் மாயமாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விபத்தில் 13 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகையை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.