Connect with us

இந்தியா

சபாநாயகர் கொடுத்த முக்கிய அப்டேட்.. ஆளுநர் என்ன செய்யப்போகிறார்?

Published

on

சபாநாயகர் கொடுத்த முக்கிய அப்டேட்.. ஆளுநர் என்ன செய்யப்போகிறார்?

Loading

சபாநாயகர் கொடுத்த முக்கிய அப்டேட்.. ஆளுநர் என்ன செய்யப்போகிறார்?

2025ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் வரும் ஜனவரி மாதம் 6ம் தேதி நடக்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும், “இம்முறை ஆளுநர் உரையை முழுமையாக வாசிப்பார் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, இன்று (20ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஜனவரி 6ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆளுநர் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த உள்ளார். இந்த கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

ஆளுநர் கடந்த முறை, முதல் பக்கத்தையும், கடைசிப் பக்கத்தையும் மட்டுமே படித்தார். இம்முறை ஆளுநர் உரையை முழுமையாக வாசிப்பார் என நம்புகிறோம். சட்டப்பேரவையில் ஆளுநருக்கு உரை நிகழ்த்தத்தான் அனுமதியே தவிர, கருத்துகளை சொல்ல அனுமதி இல்லை. அவையின் உள்ளே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்களுக்கு மட்டுமே கருத்து சொல்ல அனுமதி. இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம். அதோடு, இது சட்டப்பேரவைக்கும் பொருந்தும். ஆளுநருக்கு உரிய அனைத்து மரியாதைகளையும் இந்த அரசு கொடுக்கும்.

நாடாளுமன்றத் தேர்தல், மழை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு குறைந்த நாட்களே சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துள்ளது. குளிர்கால கூட்டத்தொடர் 2 நாட்களே நடந்தாலும் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டது” என்று தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன