பொழுதுபோக்கு
கஞ்சீவரம் சேலையில் கலக்கலான த்ரிஷா: குஷ்பு கொடுத்த நச் கமெண்ட்!

கஞ்சீவரம் சேலையில் கலக்கலான த்ரிஷா: குஷ்பு கொடுத்த நச் கமெண்ட்!
நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.1999-ம் ஆண்டு பிரஷாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் த்ரிஷா. அமீர் இயக்கத்தில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக மாறினார்அதன்பிறகு, விக்ரம், விஜய், சூர்யா, அஜித், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் நடித்துள்ளார்.லியோ படத்தின் மூலம் 4-வது முறையாக விஜயுடன் இணைந்து நடித்த த்ரிஷா அதன்பிறகு தொடர்ந்து அதிகமான பட வாய்ப்புகளை பெற்று வரும் நிலையில், சூர்யா 45 படத்திலும் அவர் நாயகியாக நடித்து வருகிறார்.அதேபோல் கமல் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள தக்லைப், அஜித் நடிப்பில் விடா முயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வரும் த்ரிஷா சமூகவலைதளங்கில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.தற்போது சேலையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் கொடுத்துள்ள நடிகை குஷ்பு, மிகவும் அழகான ஒன்று என்று சொல்லி முத்தம் கொடுப்பது போன்று பதிவிட்டுள்ளார்.