இந்தியா
டாப் 10 நியூஸ் : குவைத் செல்லும் பிரதமர் மோடி முதல் பூமிக்கு அருகில் 2 சிறுகோள்கள் வரை!

டாப் 10 நியூஸ் : குவைத் செல்லும் பிரதமர் மோடி முதல் பூமிக்கு அருகில் 2 சிறுகோள்கள் வரை!
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக குவைத் நாட்டிற்கு இன்று (டிசம்பர் 21) செல்கிறார். கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் குவைத் நாட்டிற்கு செல்வது இதுவே முதல் முறை.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகளை இன்று நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மலேசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பினாங்கு தீவுக்கு நேரடி விமான சேவை இயக்கப்பட வேண்டும் என பல மாதங்களாக பயணிகள் கோரிக்கை விடுத்த நிலையில், இன்று முதல் சென்னையில் இருந்து நேரடி விமான சேவை தொடங்குகிறது.
ஆஸ்டிராய்டு எனப்படும் மிகப்பெரிய இரண்டு சிறுகோள்கள் இன்று பூமியை கடந்து செல்ல இருப்பதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இவை பூமிக்கு அருகே எந்தவொரு பாதிப்பும் இன்றி கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இன்றும் நாளையும் சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.
எழுத்தாளர் ஜெயமோகன் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெறும் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா இன்று காலை 10 மணிக்கு கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. இந்தாண்டுக்கான விருது தமிழ்நவீன இலக்கியத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவரான இரா.முருகனுக்கு வழங்கப்படுகிறது.
வடசபரி என்று போற்றப்படும் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.
மத்திய மேற்கு வங்கக்கடலில் ஆந்திர கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நடிப்பு, இசை, பாடகி என சினிமாவில் பன்முக திறமையை வெளிப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநள் இன்று.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் உபேந்திரா நாயகனாக நடித்து அவரே இயக்கிய ‘யு1’ என்ற படம் தமிழில் இன்று வெளியாகிறது.