இலங்கை
அராலி தெற்கு பகுதியில் கசிப்புடன் சந்தேகநபர் கைது!

அராலி தெற்கு பகுதியில் கசிப்புடன் சந்தேகநபர் கைது!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கில் ஐந்து லீற்றர் கசிப்புடன் 48 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொண்ட போதே சந்தே நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.