Connect with us

பொழுதுபோக்கு

சுயநலம்… பழிவாங்கும் நடவடிக்கை: இந்தி பிக்பாஸில் ஸ்ருதிகா அர்ஜூன் மீது குற்றச்சாட்டு!

Published

on

Hindi Biggboss 18

Loading

சுயநலம்… பழிவாங்கும் நடவடிக்கை: இந்தி பிக்பாஸில் ஸ்ருதிகா அர்ஜூன் மீது குற்றச்சாட்டு!

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் முகமாக கலந்துகொண்டு அசத்தி வரும் நடிகை ஸ்ருதிகா அர்ஜூன் மீது சக போட்டியாளர் குற்றம் சாட்டியுள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்தி பிக்பாஸ். முதன் முதலில் இந்தியில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இதுவரை 17 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 18-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், இந்தி சின்னத்திரை மற்றும் சமூகவலைதள பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ள நிலையில், தமிழ் முகமாக நடிகை ஸ்ருதிகா அர்ஜூன் பங்கேற்றுள்ளார்.பிக்பாஸ் வீட்டில் இவர் அவ்வப்போது அடிக்கும் கமெண்ட்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இவருக்காகவே இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் தமிழ் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஸ்ருதிகா அர்ஜூனுக்கு வரவேற்பு இருந்தாலும், இந்தி ரசிகர்கள் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள் இடையே ஸ்ருதிகா நெகடீவ் விமர்சனங்களையும் பல குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது போர்க்களமாக மாறியுள்ளது, போட்டியாளர்கள் பக்பாஸ் வீட்டில் இருப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முந்தைய எபிசோடில், டைம் காட், ஸ்ருத்திகா அர்ஜுன் ஒரு பெரிய திருப்பத்தின்போது, திக்விஜய் ரதியை வெளியேற்றினார். இதனால், சும் தரங், கரண் வீர் மெஹ்ரா மற்றும் பலர் மனம் உடைந்தனர்.உண்மையில், திக்விஜய் நீக்கப்பட்டதற்கு சும் மற்றும் கரண் வீர் ஆகிய இருவரும் ஸ்ருத்திகா அர்ஜுன் மீது குற்றம் சாட்டினர். வார இறுதி எபிசோடில், திக்விஜய் ரதியை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியதற்காக ஸ்ருத்திகா அர்ஜுன் சக போட்டியாளர்களிடம் இருந்து, பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். சும் தரங் மற்றும் கரண் வீர் மெஹ்ரா ஸ்ருத்திகா அர்ஜுன் மீது குற்றம் சாட்டி கடிதம் எழுதினர்.கரண் வீர் மெஹ்ரா எழுதியுள்ள கடிதத்தில், எல்லா நேரத்திலும் சரியாக இருப்பதை மறைக்க முயற்சி செய்கிறேன். அவர் தனது நண்பர்கள் அனைவரையும் இழந்துவிட்டார், மேலும் அவர் பரிந்துரையின் போது சும், நான், ஷில்பா மற்றும் திக்விஜய் ஆகியோருக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்த பிறகு, அவர் தனது சொந்த பழிவாங்கலுக்காக திக்விஜை வெளியேற்றியுள்ளார் என்று கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி, அவினாஷ் மிஸ்ரா மற்றும் விவியன் டிசேனா ஆகியோர் சும் தரங் பற்றி வெவ்வேறு கருத்துகளைக் கொண்டுள்ளனர். நிகழ்ச்சியின் மிகவும் போலியான போட்டியாளர் அவர் என்று அவர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, திக்விஜய் ரதி மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வரவிருக்கும் வார இறுதி கா வார் எபிசோட்களில் ஷாலினி பாசி மற்றும் பேபி ஜான் நடிகர்கள் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சல்மான் கான் தனது பிறந்தநாளில் சிக்கந்தரின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன