இந்தியா
Villupuram Footbridge|கனமழையால் மூழ்கிய தரைப்பாலம்… ஆபத்தை உணராமல் நடந்த செல்லும் பள்ளி மாணவர்கள்…

Villupuram Footbridge|கனமழையால் மூழ்கிய தரைப்பாலம்… ஆபத்தை உணராமல் நடந்த செல்லும் பள்ளி மாணவர்கள்…
கனமழையால் மூழ்கிய தரைப்பாலம்
வளவனூர் அடுத்த பரசுரெட்டிப்பாளையம் கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெஞ்சல் புயல் கனமழை காரணமாக அங்குள்ள மலட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தங்களின் அன்றாட வேலைக்காக பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதே போல் பில்லூர், திண்டிவனம், அகரம் சித்தாமூர் போன்ற பல பகுதிகளில் உள்ள தரைப்பாலமும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இதனால், மாணவர்கள், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு செல்வதற்கும், பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் பணிகளுக்கு செல்லவும், மலட்டாற்றின் தரைப்பாலத்தை கடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. தரைப்பாலத்தில் 3 அடி உயரத்திற்கு வெள்ள நீர் வழிந்தோடுவதால், அந்த வழியாக பொதுமக்களும், மாணவர்களும் ஆபத்தான நிலையில் தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர்.
அருகே உள்ள மற்றொரு பிரதான சாலை பாலத்தின் வழியாக சுற்றிச் செல்வதற்கு 4 கி.மீ., தொலைவு என்பதால், சுற்றி வருவதை தவிர்த்து, ஆபத்தான நிலையில், தரைப்பாலத்தை மக்கள் கடந்து செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் வருவாய்த்துறையினர் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் புதிய தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்றும், ஆபத்தை உணராமல், தரைப்பாலத்தை கடந்து செல்வதை தவிர்த்து அப்பகுதியில் தற்காலிக தடை விதிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.