இந்தியா
ரூ. 1 கோடி கடனால் விபரீதம்.. தீர்த்தத்தில் நண்பருக்கு விஷம் கொடுத்த கொடூரம்!

ரூ. 1 கோடி கடனால் விபரீதம்.. தீர்த்தத்தில் நண்பருக்கு விஷம் கொடுத்த கொடூரம்!
அம்மகளத்தூரை சேர்ந்த கணேசன் என்பவரின் குடும்பத்திற்கும், முரளி என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. குறி சொல்லும் தொழில் செய்து வந்த முரளி தன்னிடம் வரும் பக்தர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி தற்போது ஒரு கோடிக்கு மேல் கடன் பெற்றுள்ளார். இதனை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்த முரளி தற்கொலைக்கு முடிவு செய்துள்ளார். தான் இறந்துவிட்டால் தனது நண்பரின் குடும்பத்தினரை பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள் என நினைத்து கணேசன், கண்ணன், முத்தையன் உள்பட ஐந்து பேருக்கு விஷம் கலந்த தீர்த்தத்தை கொடுத்துள்ளார்.
இதனால் அனைவரும் மயங்கிவிழுந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததனர். இது தொடர்பாக கணேசன் அளித்த புகாரின் பேரில் முரளி மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர். இதனை அறிந்து வந்த அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் முரளி மீது கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.