Connect with us

இந்தியா

திமுக பொதுக்குழு கூட்டம் எங்கே?

Published

on

Loading

திமுக பொதுக்குழு கூட்டம் எங்கே?

திமுகவின் தலைமைச் செயற்குழு கூட்டம் இன்று டிசம்பர் 22 காலை 10 மணிக்கு அறிவாலயத்தில் நடக்கிறது.

இந்தக் கூட்டத்தின் முக்கியத்துவம் என்ன என்று அறிவாலய வட்டாரங்களில் விசாரித்த போது…

Advertisement

“திமுகவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம், ஆகியவை நடந்து முடிந்து இப்போது தலைமை செயற்குழு கூட்டம் நடக்கிறது. இதற்கு அடுத்தபடியாக கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடக்க வேண்டும்.

அதற்கான ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் முக்கியத்துவம் பெறலாம்.

அந்த வகையில் திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது பற்றியும் எங்கே நடத்துவது என்பது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

Advertisement

அநேகமாக வருகிற ஜனவரி மாதம் பொங்கல் முடிந்த பிறகு திமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களுக்குமான சார்பு அணி நிர்வாகிகள் முழுமையாக நியமனம், பல ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு புதிய ஒன்றிய அமைப்புகள் உருவாக்கம் ஆகியவற்றால் கட்சியில் நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

இந்த நிலையில் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை வழக்கம் போல சென்னை அறிவாலயத்தில் நடத்தாமல் சென்னைக்கு வெளியே நடத்தலாம் என்ற ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.

சென்னைக்கு வெளியே என்றால் மதுரை அல்லது திருச்சி ஆகிய இரண்டு பகுதிகளில் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு சாத்தியங்கள் உள்ளன. அது பற்றிய ஆராய்ந்து அனேகமாக திமுகவின் வருகிற பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடத்தப்படுவது பற்றி இன்றைய தலைமை செயற்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்க கூடும்.

Advertisement

மேலும் 234 தொகுதிகளுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் தேர்தல் நிதி வசூல் செய்ய வேண்டும் என ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தலைமையின் உத்தரவின் நிலை பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். மாவட்ட மறுசீரமைப்பின் அடிப்படையில் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட அமைப்பு என்பது பற்றியும் இக்கூட்டம் விவாதிக்கும் என எதிர்பார்ப்பு இருக்கிறது”, என்கிறார்கள் அறிவாலய வட்டாரங்களில். 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன